Pages

Subscribe:

Ads 468x60px

Showing posts with label computer. Show all posts
Showing posts with label computer. Show all posts

Thursday, January 5, 2012

விண்டோஸ் 7 குறுக்குவிசை இரகசியங்கள்...!!!


இதுவரை வெளிவந்துள்ள மைக்ரோசாப்டின் தயாரிப்புகளிலேயே மிகவும் தரமானது விண்டோஸ் 7 தான் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இருக்க முடியாது. விண்டோஸ் 7 ல் இல்லாத வசதிகளே இல்லை எனலாம். விண்டோஸ் 7ன் கீபோர்டு இயங்கமைவானது உங்களால் மவுஸ் இல்லாமலே அனைத்து பணிகளையும் செய்திடும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் சில குறுக்குவிசை(shortcut keys) இந்த பதிவில் பார்ப்போம். இதில் பல குறுக்கு விசைகளை அனைவரும் அறிந்திருந்தாலும் சில மிகவும் புதியனவாக இருக்கும்..

1)Ctrl + Shift + Click- ஏதேனும் ஒரு புரோகிராமை அட்மினிஸ்ட்ரேட்டராக ஓப்பன் செய்ய:


நாம் பலநேரங்களில் சில புரோகிராம்களை அட்மினிஸ்ட்ரேட்டராக திறக்க வேண்டியிருக்கும் அதற்கு அந்த புரோகிராமின் மீது ரைட் க்ளிக் செய்து தேர்வு செய்வதற்கு Ctrl + Shiftஅழுத்திக்கொண்டு அந்த புரோகிராமின் மீது க்ளிக் செய்தால் அது தானாக அட்மினிஸ்ட்ரேட்டர் அதிகாரத்துடன் திறக்கும்.


2)Shift + Right-Click-ரைட் க்ளிக்கில் வரும் ஆப்ஷன்களை அதிகரிக்க செய்ய:
நீங்கள் ஷிப்ட் பட்டனை அழுத்திக்கொண்டு ஏதேனும் ஒரு கோப்பின் மீது ரைட் க்ளிக் செய்தால் தோன்றும் மெனுவானது சாதாரண மெனுவில் உள்ளதை விட சில அதிக ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.


இதில் சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளவை புதிதாக வந்த ஆப்ஷன்கள்.


3)Windows-button + Number-டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம்களை திறக்க:
நாம் டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம்களை திறக்க அவற்றின் மீது க்ளிக் செய்வதை விட நமது விண்டோவ் கீயை அழுத்திக்கொண்டு அந்த புரோகிராம் டாஸ்க்பாரில் உள்ள வரிசை எண்ணை அழுத்தினால் அது தானாக திறந்து கொள்ளும். 1ல் ஆரம்பித்து 0 இறுதியாக வரும்.


4. Ctrl + Shift + N-ஆக்டிவ் விண்டோவில் புதிதாக ஒரு ஃபோல்டரை உருவாக்க:


நாம் ஒரு புதிய ஃபோல்டரை ஏதேனும் ஒரு இடத்தில் உருவாக்குவதற்கு மவுசை ரைட் க்ளிக் செய்து புதிய ஃபோல்டரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள விசைகளை அழுத்தினால் ஒரு புதிய ஃபோல்டர் திறக்கப்படும்.

5. Shift + Right-Click-ரைட் க்ளிக்கில் வரும் SEND TOமெனுவில் வரும் ஆப்ஷன்களை அதிகரிக்க:


நாம் ஏதேனும் ஒரு கோப்பின் மீது ரைட் க்ளிக் செய்யும்போது அதில் சென்ட் டூ என்ற ஒரு வசதி இருக்கும் அதில் குறிப்பிட்ட சில ஃபோல்டர்கள் மட்டுமே காட்டப்படும் மற்ற இடங்களுக்கு நகர்த்த நாம் கட் அல்லது காப்பி ஆப்ஷனை உபயோகிக்க வேண்டும்.. ஆனால் ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு அந்த ஆப்ஷனின் மீது ரைட் க்ளிக் செய்வதன் மூலம் சென்ட் டூ ஆப்ஷனில் வரும் இடங்கள் அதிகரிக்கும், இதனால் அந்த கோப்பினை வேறு இடத்திற்கு மாற்றுவது எளிதாக இருக்கும்.


6. Ctrl + Shift + Escape-விண்டோஸ் டாஸ்க் மேனேஜரை திறக்க:
வழக்கமாக நாம் டாஸ்க் மேனேஜரை திறக்க CTRL+ALT+DELETE விசைகளை உபயோகிப்போம், அதற்கு பதிலாக மேலே உள்ள விசைகளையும் உபயோகிக்கலாம்.

7. Windows-botton + Pause-உங்கள் கணினியின் System Propertiesவிண்டோவை திறக்க:


நாம் பல நேரங்களில் சிஸ்டம் புராபர்டீஸ் விண்டோவை திறக்க வேண்டியிருக்கும், ஏனெனில் இங்குதான் நமது கணினியின் பல்வேறு அளவீடுகள் இருக்கும் மற்றும் டிவைஸ் மேனேஜருக்கும் இங்கிருந்துதான் செல்வோம். இதனை திறக்க My Computer ஐகான் மீது ரைட் க்ளிக் செய்வதற்கு பதிலாக மேலே உள்ள விசைகளை அழுத்தினால் போதுமானது, இந்த Pause பட்டனானது பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் வரிசையில், ஸ்க்ரோல் லாக் பட்டனுக்கு பக்கத்தில் இருக்கும்.

8. Windows-button+B- வேறு இடங்களில் இருந்து சிஸ்டம் ட்ரேவிற்கு வருவதற்கு:



நாம் பல நேரங்களில் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது சிஸ்டம் ட்ரேவில் உள்ள ஐகான்களில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்த வேண்டியிருக்கும், இதற்கு மவுசினை பயன்படுத்துவதை விட மேலே குறிப்பிட்டுள்ள விசைகளை அழுத்தினால் சிஸ்டம் ட்ரே ஆக்டிவ்வாக இருக்கும் இப்போது அம்புக்குறி விசைகளின் மூலம் உங்களுக்கு தேவையான ஐகானை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

9. Shift+Click on Taskbar Item-இரண்டாவது முறை அதே புரோகிராமினை திறக்க:
நாம் ஏதேனும் ஒரு புரோகிராம் உதாரணத்திற்கு கூகுள் க்ரோமில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அதில் இன்னொரு விண்டோவை திறக்க விரும்பினால் மவுசில் ரைட் க்ளிக் செய்து புது விண்டோவை திறப்பதற்கு பதிலாக ஷிப்ட் கீயினை அழுத்திக்கொண்டு அந்த புரோகிராமின் மீது க்ளிக் செய்தால் இன்னொரு விண்டோவ் ஓப்பன் ஆகிவிடும்.

10. Windows-button+D-எல்லா விண்டோக்களையும் மினிமைஸ் செய்து டெஸ்க்டாப்பினை காட்ட:
நாம் டெஸ்க்டாப்பிற்கு செல்வதற்கு எல்லா புரோகிராம்களையும் மினிமைஸ் செய்வதோ அல்லது அதற்கு பதில் டாஸ்க்பாரின் இறுதியில் உள்ள டெஸ்க்டாப் பட்டனை அழுத்துவோம். அதற்கு பதிலாக மேலே குறிப்பிட்டுள்ள பட்டன்களை அழுத்தினால் டெஸ்க்டாப் காட்டப்படும்

Wednesday, December 28, 2011

Upgraded version in Aakash Tablet -UBISLATE 7 [Pre-Booking]


The much awaited India’s ultra low cost Aakash tablet is finally come to sale. The team of engineers at Datawind has come up with the upgraded version of the Aakash tablet. This upgraded version of Aakash is called Ubislate 7. This will be introduce in Jan 2012. The CEO of DataWind, Mr. Suneet Singh Tuli says ‘This is a made-in-India product. Thank you for giving me the opportunity to do this.’ He adds, ‘The final goal is to either provide the same features at a lower cost or provide better functionality and features at the same cost.


Comparison table between Aakash Tablet and UBISLATE 7

SpecificationsAakashUbiSlate 7 (The upgraded version of Aakash)

Availability

NOW!


Late January
Pricing
Rs.2,500
Rs.2,999

Microprocessor

Arm11 – 366Mhz
Cortex A8 – 700 Mhz
Battery
2100 mAh
3200 mAh

OS

Android 2.2

Android 2.3

Network
WiFi
WiFi & GPRS (SIM & Phone functionality)


Some features on UBISLATE 7:
  • High quality web anytime and anywhere.
  • Connect GPRS or WiFi.
  • GPRS: Embeded Modem eliminates the need for external dongles and allow Internet Access everywhere.
  • WiFi: Allow fast youtube videos at hotspots.
  • Fast web access even on GPRS networks, across the country using Datawind's patented acceleration technology.
  • Web,Email, Facebook, Twitter and much more.
  • Games full office suite, Educational Softwares, Over 150,000 apps available.
  • Expandable memory to 32GB.
  • Use can use any ordinary pen-drive
  • And it's a phone to make/receive voice calls.
How to Pre-Book UBISLATE 7:
Go to this link and fill your form and hit submit button that's all. Your request sent to Datawind sales team and they sent you confirmation email with booking number.
apply

After this Released the sales team contact you your given email ID or Mobile shortly. Payment method is cash on delivery.

கணினியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய .....


உலகில் கோடிக்கணக்கான கம்ப்யுட்டர் இருந்தாலும் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு குறியீடு எண் கொடுத்து பிரித்து வைத்துள்ளனர். இதுவே ஐ.பி எண்(Internet Protocol) என அழைக்கபடுகிறது. இந்த ஐ.பி. எண்ணை வைத்து ஒரு கணினியின் இருப்பிடத்தையும், தகவல் பரிமாற்றங்களையும் சரியாக கூற முடியும். இது மட்டுமில்லாமல் ஹாக்கர்கள் கணினியின் ஐபி எண்ணை அடிப்படையாக கொண்டே கணினியை முடக்குகின்றனர்.  (ஆகையால் உங்கள் கணினியின் ஐபி எண்ணை யாரிடமும் பகிந்து கொள்ள வேண்டாம்). கணினியின் ஐ.பி. எண்  சுலபமாக கண்டறிய சிறந்த 10 தளங்கள் கீழே கொடுத்துள்ளேன். இந்த ஐபி எண்களை நாம்ஆப்லைனிலும் பார்த்து கொள்ளலாம். 
இந்த தளங்களில் ஐபி எண் மட்டுமில்லாமல் உங்களின் இணைய வழங்குனர், மற்றும் நீங்கள் இருக்கும் இருப்பிடம் போன்ற சில விவரங்களும் வரும்.

1) What is my ip address
இந்த தளம் ஐபி எண்ணை கண்டறிய மிகவும் பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் ஐபி எண் மட்டுமின்றி சில கூடுதல் விவரங்களும் வருகிறது. அது மட்டுமில்லாமல் நம் கணினியின் இருப்பிடத்தை கூகுள் மேப் உதவியுடன் காட்டுகிறது.

இந்த தளத்தில் நம்முடைய கணினியின் ஐ.பி எண் மட்டும் காட்டுகிறது. மற்றும் ஐ.பி. எண்ணை பற்றிய ஒரு விரிவான கட்டுரையை ஆங்கிலத்தில் அங்கு கொடுத்துள்ளனர். தேவை படுபவர்கள் அதை படித்து ஐபி எண்ணை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த தளத்தில் உங்கள் ஐபி எண்ணோடு உங்கள் இணையதளத்தில் இணைக்க விட்ஜெட் கோடிங்கையும் கொடுத்துள்ளனர். 

மற்ற தளங்களில் நாம் சென்றாலே நம் கணினியின் ஐ.பி. எண்ணை கண்டறிந்து விடலாம். ஆனால் இந்த தளத்தில் சில குறியீடு எண்ணை கொடுத்து Show my IP என்ற பட்டனை அழுத்தினால் தான் நம்முடைய கணினியின் ஐ.பி. எண்ணை கண்டறிய முடியும்.

இந்த தளத்தில் நம் கணினியின் ஐ.பி. எண் மட்டுமின்றி நம்முடைய கணினியில் உபயோகிக்கும் உலவிகள் அதன் வெர்சன்கள் போன்ற விவரங்களும் வருகிறது. 

இந்த தளத்தில் நமது ஐபி எண்ணும் மற்றும் அதனோடு நாம் உபயோகிக்கும் கணினியின் இயங்கு தளம் (Operating System), நாம் உபயோகிக்கும் உலவி(Browser) போன்ற விவரங்களும் வருகின்றன. மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக நம் இணைய வேகத்தையும் அறிந்து கொள்ளலாம். 

இந்த தளத்திலும் நம் கணினியின் ஐபி எண்ணை கண்டறியலாம். 

இந்த தளத்தில் நமது ஐபி எண்ணும் மற்றும் அதனோடு நாம் உபயோகிக்கும் கணினியின் இயங்கு தளம் (Operating System), நாம் உபயோகிக்கும் உலவி(Browser) போன்ற விவரங்களும் வருகின்றன. மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக நம் இணைய வேகத்தையும் அறிந்து கொள்ளலாம். இன்னும் சில விவரங்களும் இதில் கிடைக்கிறது. 

இந்த தளத்தில் நம் ஐபி எண்ணோடு கூடுதல் வசதியாக நம் ஐபி எண்ணை மறைத்து இணையத்தில் உலவும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தளத்திலும் நம் ஐபி எண்ணும் அதன் இருப்பிடத்தை கூகுள் வரைபடம் கொண்டும் காட்டியுள்ளனர்.

டைனமிக் லிங்க் லைப்ரேரி (DLL)......


கம்ப்யூட்டர் இயக்கம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல். பைல்ஸ் என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப் படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது. 

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான பைல்கள் இவை. இவை மற்ற பைல்களிலிருந்து தனியே தெரிந்தாலும் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இவை என்ன என்றோ அல்லது இவை இல்லை என்றால் என்ன செய்திடும் என்றோ கவலைப் படுவதில்லை

இவை எதற்காக எவ்வாறு செயல்படுகின்றன என்று தெரிந்து கொண்டால் கம்ப்யூட்டர் இயக்கம் குறித்த மர்மங்களிலிருந்து நிச்சயம் விடுபடலாம். இந்த பைல்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளின் தன்மை குறித்து புரோகிராமர்கள் தான் கட்டாயம் அறிந்து கொண்டிருக்க வேண்டும். 

இருப்பினும் இவை மிக முக்கியமான வகை பைல்கள் என்பதால் இவை குறித்து நாம் நிச்சயம் ஓரளவிற்காவது அறிந்திருக்க வேண்டும். எனவே கீழே கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சாராத ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படைத் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.



ஒரு டி.எல்.எல். பைல் அந்த கோப்பின் துணைப்பெயரான DLL என்பதை வைத்து அடையாளம் காணலாம். இது குறித்து பல விளக்கங்கள் தரப்பட்டாலும் மைக்ரோசாப்ட் தன் இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது சுருக்கமாகவும் அதன் முக்கிய தன்மையினையும் காட்டுவதாக உள்ளது. ஒரு டைனமிக் லிங்க் லைப்ரேரி பைலில் மற்ற டி.எல்.எல். அல்லது அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான பைலின் செயல்பாடுகளை இயக்கும் புரோகிராம் வரிகள் எழுதப்பட்டிருக்கும். 

புரோகிராமர்கள் ஒரு டி.எல்.எல். பைலில் சில குறியீட்டு வரிகளை அமைக்கின்றனர். இந்த குறியீடுகள் திரும்ப திரும்ப மேற்கொள்ள வேண்டிய சில செயல்களுகானவை. குறிப்பிட்ட சில செயல்களை கம்ப்யூட்டரில் மேற்கொள்ளத் தேவையான குறியீடுகள் இவை. 

ஒரு எக்ஸிகியூட்டபிள் (.EXE) பைல் போல டி.எல்.எல். பைல்களை நேரடியாக இயக்க முடியாது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற எக்ஸிகியூட்டபிள் அல்லது டி.எல்.எல். பைல்களின் குறியீடுகளே இன்னொரு டி.எல்.எல். பைலின் குறியீடுகளை இயக்க முடியும். 


இதனை இன்னொரு வழியாகவும் காணலாம். டி.எல்.எல். பைல்கள் ஒரு செயலை மட்டும் மேற்கொள்ளும் பைல் தொகுப்புகள்.இதனை வெவ்வேறு புரோகிராம்களில் குறிப்பிட்ட செயலினை மேற்கொள்ள தேவைப்படுகையில் இøணைத்து இயக்கலாம். இதனால் கம்ப்யூட்டர் செயல்பாடு எளிதாகிறது. 

கம்ப்யூட்டரில் நாம் பலவகை அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறோம். வேர்ட் ப்ராசசர், இன்டர்நெட் பிரவுசர், ஸ்ப்ரெட் ஷீட், பிக்சர் மேனேஜர், கிராபிக்ஸ் டிசைனர், பேஜ் மேக்கர் என இவற்றின் வேலைத் தன்மை மொத்தமாக வேறுபடுகின்றன. ஆனால் இவை அனைத்திலும் சில குறிப்பிட்ட செயல்பாடுகள் பொதுவான தன்மையானùதாய் இருக்கின்றன. 

எடுத்துக்காட்டாக பைலை திறத்தல், மாற்றங்களை அப்டேட் செய்தல், ஒரு பைலில் மேல் கீழ் செல்லல், அழித்ததைப் பெறல், அழித்தல், அறவே நீக்குதல் என நிறைய வேலைகளை பொது வேலைகளாகக் காட்டலாம். இந்த வேலைகள் பெரும்பாலான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் இயங்குகையில் மேற்கொள்ள வேண்டிய திருக்கும். இந்த வேலைகளுக்கு ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிலும் அதற்கான குறியீடுகளை எழுதி அமைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் அது புரோகிராமரின் உழைப்பின் நேரத்தை வீணாக்குவதாக அமையும். 

இவற்றைப் பொதுவாக மேற்கொள்ளும் வகையில் சிறிய புரோகிராம் பைல்களில் அமைத்து அவற்றை தேவைப்படும் போது மெயின் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராமில் இருந்து இயக்கினால் எளிதாக வேலை அமைவதுடன் தேவையற்ற திரும்ப திரும்ப ஒரு பணிக்காக பல இடங்களில் வேலை மேற்கொள்வது குறையும். 

இந்த பொதுவான வேலைகளுக்காக அமைக்கும் பைல்களே டி.எல்.எல். பைல்கள். இந்த பைல்கள் மொத்தமாக ஒரு நூலகத்தில் இருக்கும் நூல்கள் போல ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தேக்கி வைக்கப்படுகின்றன. அவற்றை மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் எடுத்து பயன்படுத்துகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் பயன்படுத்த முடியும். 

இங்கு சில முக்கியமான டி.எல்.எல். பைல்களையும் அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதனையும் காணலாம்.

COMDLG32.DLL: இது டயலாக் பாக்ஸ்களை கண்ட்ரோல் செய்கிறது. 

GDI32.DLL: இந்த பைல் பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. கிராபிக்ஸ் வரைகிறது. டெக்ஸ்ட்டைக் காட்டுகிறது. எழுத்து வகைகளை நிர்வகிக்கிறது.

KERNEL32.DLL: இதில் நூற்றுக் கணக்கான செயல்பாடுகள் உள்ளன. குறிப்பாக மெமரியினை நிர்வாகம் செய்வது அவற்றில் முக்கியமான ஒன்று. கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவருக்கான பல வகையான யூசர் இன்டர்பேஸ்களை இது கையாள் கிறது. புரோகிராம் விண்டோக்களை அமைப்பதில் துணை புரிகிறது. அதன் மூலம் பயனாளர்களுக்கு இடையே செயல் படுகிறது. 

இவ்வாறு பொதுவான செயல்பாடுகளுக்கென பொதுவான டி.எல்.எல். பைல்கள் இருப்பதால் தான் விண்டோஸில் இயக்கப்படும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களும் ஒரே மாதிரியான தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் அமைகின்றன. அனைத்து வகையான அப்ளிகேஷன் செயல்பாடுகளை தரப்படுத்துவதில் இந்த டி.எல்.எல். பைல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

இதனால்தான் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டில்விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைவரின் பாராட்டைப் பெற்ற ஆதரவு பெற்ற சிஸ்டமாக இடம் பிடிக்க முடிந்தது. விண்டோஸுக்கு முன் டாஸ் என்னும் இயக்கம் இருந்தது. 

அதனைப் பயன்படுத்தியவர்கள் நினைவு கூர்ந்தால் எப்படி ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் ஒரு மாதிரியான முகப்பு கிடைத்தது என்பதனை உணர்வார்கள். அது விண்டோஸ் வந்தவுடன் மாறிவிட்டது. அதற்குக் காரணம் இந்த டி.எல்.எல். பைல்களே.