Pages

Subscribe:

Ads 468x60px

Showing posts with label mobile. Show all posts
Showing posts with label mobile. Show all posts

Saturday, June 9, 2012

கைபேசிகளுக்கான முழுமையான உலாவி: Skyfire

பொதுவாக கைபேசி உலாவிகளில் இணையத்தளங்கள் முழுமையாக தெரியாது, குறிப்பாக இணைய பக்கங்களில் வீடியோக்களை காண முடியாது.
இது போன்று சில குறைபாடுகள் கைபேசி உலாவியில் உண்டு. ஸ்கைபயர்(Skyfire) கணணியில் இணையத்தளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் கைபேசி உலாவியில் இணையத்தளங்கள் தெளிவாக தெரிகின்றன.
யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணணியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.
ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இயங்குதளத்தை உபயோகிக்கும் கைபேசிகளுக்கென்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை கைபேசிகளையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.
மிக குறிப்பாக தமிழ் இணையத்தளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற கைபேசி உலாவிகளில் தமிழ் இணையத்தளங்களை பார்க்க முடியாது.
ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.
நீங்கள் கைபேசியில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.
உங்கள் கணணியில் தரவிறக்கிய பின் உங்கள் கைபேசிக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள்.
நேரடியாக உங்கள் கைபேசியில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து m.skyfire.com இந்த முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.

Monday, January 23, 2012

புற்றுநோயை கண்டறியும் ஸ்மார்ட் போன்கள்....

மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
அதாவது ஜேர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றில் வரையப்பட்டிருந்த பயனுள்ள வேதியல்(Angewandte Chemie) எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவாறு தொடுதிரை தொழில்நுட்பத்தை(Touch Screen) புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்த முடியும் என்று  கூறியுள்ளனர்.
இதற்காக தொடுதிரை கொண்ட ஸ்மார்ட் போன்கள், PDA மற்றும் தொடுதிரை தொழில்நுட்பத்தைக்கொண்ட ஏனைய இலத்திரனியல் சாதனங்களையும் இதற்காக பயன்படுத்தமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இத்தொழில்நுட்பமானது உடலிலுள்ள புரதம், DNA(பரம்பரை அலகு மூலக்கூறு) என்பவற்றிலிருக்கும் இலத்திரன் ஏற்றங்களுக்கு இசைவாக  செயற்படுவதால் இவ்வாறு புற்றுநோயை கண்டறிய சாதகமாக பயன்படுத்த முடியும் என்பதில் தமக்கு 100 சதவீத நம்பிக்கை இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Thursday, January 12, 2012

nokia & microsoft கூட்டணியின் அடுத்த வெளியீடு: 'லுமியா 900'


  நொக்கியா மற்றும் விண்டோஸ் நிறுவனங்கள் இணைந்து ஏற்கனவே இரண்டு கையடக்கத்தொலைபேசிகளை வெளியிட்டன.

அவை நொக்கியா லுமியா 800, மற்றும் லுமியா 710 என்பவையாகும்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய போதிலும் இவற்றல் பெரிதாக எதனையும் சாதிக்கமுடியவில்லை.

மிகப்பெரிய இரு நிறுவனங்களின் கூட்டுத்தயாரிப்பாக இருந்தபோதிலும் ஐ போன் 4S மற்றும் செம்சுங் கெலக்ஸி எஸ் 2 ஆகியவற்றின் விற்பனையை முந்தமுடியவில்லை.

இந்நிலையில் நொக்கியா தனது அடுத்த வெளியீடான நொக்கியா லுமியா 900 கையடக்கத்தொலைபேசியை வெளியிட்டுள்ளது.

இது தோற்றத்தில் லுமியா 800 ஐ ஒத்திருந்த போதிலும்சற்று பெரியது.

விண்டோஸ் 7.5 மெங்கோ தொகுப்பின் மூலம் இயங்கும் இது 8 மெகாபிக்ஸல் கெமராவினையும் கொண்டது.

இதனைத்தவிர 4.3 அங்குல AMOLED திரையைக் கொண்டிருப்பதுடன், 1 மெகாபிக்ஸல் Front கெமராவினையும் கொண்டுள்ளது.

இ.எஸ்.பின், சி.என்.என். உட்பட அப்ளிகேஷ்ன்களையும் கொண்டு வெளியாகவுள்ளது இம்மாதிரி.

4ஜி வலையமைப்பில் இயங்கக்கூடியதாகவும் இது தயாரிக்கப்பட்டுள்ளமையானது சிறப்பானதொரு அம்சமாகும்.





இம் மாதிரியாவது நொக்கியாவுக்கு கைகொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதன் அனைத்து வசதிகளையும் www.nokia.com/us-en/products/phone/lumia900/specifications/ என்ற தொடுப்பின் ஊடாக செல்வதன் மூலம் பார்வையிடலாம். 
_

Thursday, December 29, 2011

ஜி.எஸ்.எம் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிப் உபயோகிப்போர்களுக்கு புதிய அச்சுறுத்தல்

உலகில் அதிகமானோர் பாவிக்கும் கையடக்கத்தொலைபேசிகள் ஜி.எஸ்.எம் எனப்படும் (Global System for Mobile Communications) தொழிநுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.
புள்ளிவிபரங்களின் படி உலகத் தொலைபேசிகளில் 80% இத்தொழில்நுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.

இந்நிலையில் ஜேர்மனிய நாட்டு ஆராய்ச்சி அமைப்பான Security Research Labs இன் தலைவரான கார்ஸ்டன் நோஹல் ஜி.எஸ்.எம். கையடக்கத்தொலைபேசிகளில் காணப்படும் பாதுகாப்புப் குறைபாடு தொடர்பில் ஆய்வறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன் படி ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் இயங்கும் அனைத்து கையடக்கத்தொலைபேசிகளிலும் பாதுகாப்புக் குறைபாடு காணப்படுவதாகவும் இதன் மூலம் எமது கையடக்கத்தொலைபேசிகளிலிருந்து நாம் அறியாதவகையில் அழைப்புகளை மேற்கொள்ளமுடிவதுடன்,
குறுந்தகவல்களையும் அனுப்பமுடியுமென நோஹல் எச்சரிகை விடுத்துள்ளார்.
அதாவது நமது கையடக்கத்தொலைபேசிகள் நாம் அறியாத வகையில் ஹெக்கர்களின் கைகளுக்குள் சிக்குவதாகும்
இப்பாதுகாப்புக் றைபாட்டின் மூலம் குறைந்த மணித்தியாலத்தில் அதிக கையடக்கத்தொலைபேசிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஹெக்கர்களால் முடியுமென நோஹல் குறிப்பிட்டுள்ளார்
பொதுவாக சி.டி.எம்.ஏ உட்பட மற்றைய வலையமைப்புகளை விட ஜி.எஸ்.எம் ஆனது பாதுகாப்பாகக் கருதப்படுகின்றது
எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தியானது பாவனையாளர்களுக்கும், சேவை வழங்குநர்களுக்கும் சற்று அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.
ஸ்மார்ட் போன்களின் விற்பனையானது தற்காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளமையானது ஹெக்கர்களின் கவனத்தினை மொபைல்உலகத்தினை நோக்கித் திருப்பியுள்ளது.