அவை நொக்கியா லுமியா 800, மற்றும் லுமியா 710 என்பவையாகும்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய போதிலும் இவற்றல் பெரிதாக எதனையும் சாதிக்கமுடியவில்லை.
மிகப்பெரிய இரு நிறுவனங்களின் கூட்டுத்தயாரிப்பாக இருந்தபோதிலும் ஐ போன் 4S மற்றும் செம்சுங் கெலக்ஸி எஸ் 2 ஆகியவற்றின் விற்பனையை முந்தமுடியவில்லை.
இந்நிலையில் நொக்கியா தனது அடுத்த வெளியீடான நொக்கியா லுமியா 900 கையடக்கத்தொலைபேசியை வெளியிட்டுள்ளது.
இது தோற்றத்தில் லுமியா 800 ஐ ஒத்திருந்த போதிலும்சற்று பெரியது.
விண்டோஸ் 7.5 மெங்கோ தொகுப்பின் மூலம் இயங்கும் இது 8 மெகாபிக்ஸல் கெமராவினையும் கொண்டது.
இதனைத்தவிர 4.3 அங்குல AMOLED திரையைக் கொண்டிருப்பதுடன், 1 மெகாபிக்ஸல் Front கெமராவினையும் கொண்டுள்ளது.
இ.எஸ்.பின், சி.என்.என். உட்பட அப்ளிகேஷ்ன்களையும் கொண்டு வெளியாகவுள்ளது இம்மாதிரி.
4ஜி வலையமைப்பில் இயங்கக்கூடியதாகவும் இது தயாரிக்கப்பட்டுள்ளமையானது சிறப்பானதொரு அம்சமாகும்.
இம் மாதிரியாவது நொக்கியாவுக்கு கைகொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
இதன் அனைத்து வசதிகளையும் www.nokia.com/us-en/products/phone/lumia900/specifications/ என்ற தொடுப்பின் ஊடாக செல்வதன் மூலம் பார்வையிடலாம். _
No comments:
Post a Comment