உலக அளவில் பிரபலமான சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் இப்போது தனது 7 இன்ச் டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த டேப்லெட் ஒரு சக்தி வாய்ந்த ஸ்மார்ட் போன் போல தோன்றும். இந்த புதிய டேப்லெட்டின் பெயர் கேலக்ஸி டேப் 620 ஆகும்.
அதே போல் இந்த புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு 3.2 இயங்கு தளத்தைக் கொண்டிருக்கும். அதனால் இந்த டேப்லெட் மிக வேகமாக இயங்கும் என நம்பலாம். அதுபோல் தகவல் பரிமாற்றமும் இந்த டேப்லெட்டில் மிக வேகமாக இருக்கும்.
இந்த கேலக்ஸி டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 1.2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. இதன் ரேம் 1 ஜிபி ஆகும். அதுபோல் இதன் டிஸ்ப்ளே கப்பாசிட்டிவ் தொடுதிரை வசதி கொண்டு 7 இன்ச் அளவில் வருகிறது.
இந்த டிவைஸ் ஸ்மார்ட்போன் போலவும் அதே நேரத்தில் ஒரு டேப்லெட் போலவும் இயங்கும் சக்தி கொண்டிருக்கிறது. அதுபோல் வீடியோ காலிங் மற்றும் வீடியோ கான்பரன்சிங் போன்றவற்றை இந்த டேப்லெட்டில் மிகச் சிறப்பாக செய்ய முடியும். அடுத்ததாக இந்த டேப்லெட்டில் ஆன்ட்ராய்டு 3.2 இயங்கு தளம் உள்ளது.
இதன் 1ஜிபி டிடிஆர் 2 ரேம் மற்றும் 1.2 ப்ராசஸர் மூலம் இந்த டேப்லெட் பல காரியங்களைச் செய்யும் திறமை கொண்டது. அதுபோல் இதன் வேகமும் தாறுமாறாக இருக்கும். இதன் டிஸ்ப்ளேயில் பிளேன் டூ லைன் சுவிட்சிங் தொழில் நுட்பம் உள்ளது. இந்த தொழில் நுட்பம் டிஸ்ப்ளேயில் உள்ள படங்களை மிகத் தெளிவாகத் துல்லியமாகக் காட்டும். மேலும் இந்த கேலக்ஸி டேப் 620 மிகவும் பொழுதுபோக்கு அம்சம் வாய்ந்ததாகும். இதன் செயல் திறனும் மிக பக்காவாக இருக்கும்.
இந்த கேலக்ஸி டேப் 620ல் உள்ள 3ஜி இணைப்பு மூலம் பதிவிறக்கம் செய்வதை மிக விரைவாகச் செய்ய முடியும். இதன் பின்புறமுள்ள 3 மெகா பிக்சல் கேமரா 720பி எச்டி ரிசலூசன் கொண்ட வீடியோவை எடுக்க வல்லது. அதுபோல் இதன் 2 மெகா பிக்சல் முகப்பு கேமரா மூலம் வீடியோ கான்பரன்சிங்கை மிக அருமையாகச் செய்ய முடியும்.
இந்த கேலக்ஸி டேப் 620 ஏற்கனவே உலகச் சந்தையில் ஆன்லைன் ஸ்டோர்கள் மூலம் கிடைக்கின்றது. இது இந்தியாவிற்கு வரும் போது இதன் விலை ரூ.30,000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் விற்பனையிலும் இந்த டேப்லெட் சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது.
thanks:kanani
No comments:
Post a Comment