Power Bank எனப்படும் Fashlight ஐயும், தொலைபேசியின் மின்கலங்களை சார்ச் செய்யும் வசதியையும் கொண்ட மின்சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உபகரணத்தில் USB 2.0 துறை(port) காணப்படுவதனால் தொலைபேசிகளையும், அதே நேரம் USB port கொண்டு மின்னேற்றக்கூடிய சாதனங்களையும் மின்னேற்ற முடியும் என்பதுடன் இது இரவு நேரங்களில் பயன்படுத்தக்கூடிய Fashlight ஐயும் தன்னகத்தே கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். இவ்வுபகரணத்தை இடத்திற்கு இடம் எடுத்து செல்லமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கம், வௌ்ளி நிறங்களில் கிடைக்கும் இச்சாதனத்தின் புற அமைப்பானது 107.4 mm நீளத்தையும், 23.7 mm விட்டத்தையும் கொண்டிருப்பதுடன் இதன் நிறை 73 கிராம் ஆகவும் காணப்படுகின்றது. இச்சாதனம் மூலம் 500 mAமின்னோட்டத்தையும், 5V அழுத்தவேறுபாட்டையும் கொண்ட மின்சாரத்தை பெறமுடியும். இதிலுள்ள மின்கலம் மின்னேற்றப்படுவதற்கு ஐந்து மணித்தியாலங்கள் தேவை. இதில் மிகத்திறன் வாய்ந்த ஒரு LED மின்குமிழும் காணப்படுகின்றது. இதன் விலை 79.99 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. |
Thursday, January 19, 2012
Power Bank புதிய மின்சாதனம் அறிமுகம்..................
Labels:
technology
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment