ஒரு தனிப்பட்ட குழுவைச் சேர்ந்த மக்களுக்கு என்று தனியாக எந்த ஒரு டிவைஸ்களும் இதுவரை தயாரிக்கப்படவில்லை. ஆனால் தற்போது அது தேவையாக இருக்கிறது. அதை உணர்ந்த மிலக்ரோவ் நிறுவனம் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு என்று தனியாக ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்குகிறது. குறிப்பாக இது அலுவலகம் செல்லும் பெண்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவு செய்யும் விதத்தில் இந்த டேப்லெட் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த மிலக்ரோவ் டேப்லெட்டின் சிறப்புகளைப் பார்த்தால் இது 1.2 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டுள்ளது. இதன் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு 2.3 ஆகும். அதுபோல் இந்த டேப்லெட்டில் 1ஜிபி டிடிஆர்3 ரேம் உள்ளது. இந்த டேப்லெட்டின் திரை 7 இன்ச் அளவைக் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே மல்டி டச் வசதி வாய்ந்தது. மேலும் இதன் இன்டர்னல் மெமரி 8ஜிபி ஆகும். இந்த மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும். இறுதியாக இதன் பேட்டரி 8 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.
தொழில் நுட்பங்களைத் தவிர்த்து இந்த டேப்லெட்டை ஒரு வைபை மோடமாகவும் பயன்படுத்த முடியும். இந்த வைபை மோடம் ஒரே நேரத்தில் மற்ற 8 டிவைஸ்களுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கும். மேலும் இந்த டேப்லெட் 3ஜி வசதியையும் சப்போர்ட் செய்வதால் இதன் வேகம் அபாரமாக இருக்கும்.
இந்த மிலக்ரோவ் டேப்லெட்டின் விலை ரூ.15000 என்று தெரிகிறது. ஆனால் ப்ளாக்பெரி நிறுவனம் தனது டேப்லெட்டை 13000க்கு வழங்குகிறது. அதனால் இந்த மிலக்ரோவ் டேப்லெட் விற்பனையில் சாதனை புரியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆனால் கண்டிப்பாக சாதனை புரியும் என்று மிலக்ரோவ் நிறுவனம் அடித்துச் சொல்கிறது. மேலும் இந்த டேப்லெட் இந்தியாவில் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது
No comments:
Post a Comment