Pages

Subscribe:

Ads 468x60px

Monday, January 9, 2012

கூகுளில் நமக்கு தேவையானதை எளிதாக தேட.......


Google நாம் அதிகமாக பயன்படுத்தும் தேடுதல்  இயந்திரம். இதில் நாம் தேடும்போது நமக்கு தேவை இல்லாத பல விசயங்களும் வர வாய்ப்பு உள்ளது.  இதை தவிர்த்து எப்படி நமக்கு தேவையானதை மட்டும் தேடுவது எப்படி என பார்ப்போம் வாருங்கள். 




நான் கொடுக்கும் டிப்ஸ்களை பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் சொல்லுங்கள். 

1.Use Of '+' sign:

இந்த + Sign ஐ பயன்படுத்துவதால் நாம் ஒரு சொற்றொடரை தரும்போது அதில் எந்த வார்த்தைக்கு முன் + ஐ தருகிறீர்களோ அது கண்டிப்பாக உங்கள் தேடுதலில் கிடைக்கும். 
உதாரணம்: Reviews of +DELL and ACER  

இதில் உங்களுக்கு ரிசல்ட் Reviews அல்லது ACER உள்ளதோ இல்லையோ கண்டிப்பாக DELL இடம்பெறும். 

2. Use Of '-' sign:


இது மேலே உள்ள +signக்கு எதிரான வேலையை செய்யும். அதாவது - sign உள்ள வார்த்தை உங்கள் தேடலில் இடம்பெறாது. 

3. Use Of '~' sign:

இந்த sign ஐ ஒரு வார்த்தைக்கு முன் சேர்த்தால் அதன் இணை பொருட்சொல்லையும்(synonyms) தரும். 

4. Search a particular site:

ஒரு குறிப்பிட்ட தளத்தில் இருந்து தகவலை தேட விரும்பினால் இந்த முறையை பயன்படுத்தலாம். 

Search: site:www.xyz.com abc

உதாரணம்: site:baleprabu.blogspot.com/ computer tricks


5. Define a word:

ஒரு சொல்லின் பொருள்(Definition) அறிய இந்த முறையை பயன்படுத்தவும். 

Search: define:abc

உதாரணம் : Search: define:Computer


6. Search for exact phrase:

ஒரு சொற்றொடரை தேட இது உதவும். 

Search: "contact us"

7. Using the wild card '*':

இது ஒரு சொல்லின் முழுதான வார்த்தை தெரியவில்லை என்றால் பயன்படுத்தவும். 

Search: friend*

இப்போது உங்களுக்கு friend, friends, friendship போன்ற வார்த்தைகளை தேடிதாரும். 

8. Using the '?' sign:

ஒரு வார்த்தைக்கு முழு spelling தெரியாத போது பயன்படுத்தலாம். 

Search: :fri??d

இப்போது உங்களுக்கு மேலே உள்ள spelling உடன் தொடர்பு உடைய வார்த்தைகளை காட்டும். 

9. Use of boolean operators :

AND,OR,NOT இவைதான் boolean operators. இவற்றை இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் சேர்ப்பதால் அந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஒரு link இல் தரும். 

உதாரணம் : 
Search: swim OR float

இங்கு AND,OR,NOT போன்றவற்றை Capital letter ஆக மட்டுமே கொடுக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------


இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு  சரியான தகவலை தேடிதரும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை சொல்லவும். குறைகளை சுட்டிக்காட்டவும். 

No comments:

Post a Comment