Pages

Subscribe:

Ads 468x60px

Showing posts with label tips. Show all posts
Showing posts with label tips. Show all posts

Saturday, June 9, 2012

Reset Firefox

கணணியில் ஒரு மென்பொருளை தொடர்ந்து உபயோகித்து கொண்டிருக்கும் பொழுது அதன் வேகம் குறைந்து போவது இயல்பு தான்.
இது உலாவிகளுக்கும் பொருந்தும், இந்த வகையில் நீங்கள் பயர்பொக்ஸ் உலாவியை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்களா? ஆரம்பத்தில் இருந்த வேகம் படிப்படியாக குறைந்து இப்பொழுது பயர்பொக்ஸ் உலாவி நிதானமாக இயங்குகிறதா? அடிக்கடி கிராஷ் ஆகிறதா?
இந்த பிரச்சினைகளை நீக்கி மீண்டும் பயர்பொக்ஸ் உலாவியை பழைய வேகத்தில் இயங்க வைக்க முடியும். இதற்கு பயர்பொக்சின் புதிய Reset Firefox என்ற வசதி உதவுகிறது.
இதற்கு முதலில் பயர்பொக்ஸ் உலாவியை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் Help - Troubleshooting Informations பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்கு ஒரு விண்டோ திறக்கும், அதில் Reset Firefox என்ற ஒரு பட்டன் இருக்கும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
அடுத்த விண்டோவில் உங்களின் இறுதி அனுமதியை கேட்கும், அதில் உள்ள Reset Firefox என்ற பட்டனை அழுத்தவும்.
ஒரு சில வினாடிகளில் உங்களுடைய உலாவியில் இருந்த பிழைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு புதிய உலாவி தயாராகி விடும்.
Reset Firefox வசதியை பயன்படுத்துவதால் உங்கள் பயர்பொக்ஸ் உலவியில் சேமித்து வைத்துள்ள Bookmarks, Cookies, Passwords, History அனைத்தும் அழிந்து விடும் என்பதை நினைவில் கொள்ளவும்.


Saturday, March 24, 2012

தேவையில்லாத மின்னஞ்சல்களை தடை செய்ய.....

இணையத்தில் உலாவுகையில் மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதன் மூலம் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்க்கலாம்.
ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக மின்னஞ்சல் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன்படுத்துவதற்காக என்றே தற்காலிக மின்னஞ்சல் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
டட்மெயில், நாட் ஷேரிங் மை இன்போ என்று பல இணையத்தளங்கள் வேண்டாத மின்னஞ்சல்களில் இருந்தும், விளம்பர மின்னஞ்சல்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன.
இந்த வரிசையில் பவுன்சர் என்ற தளம் புதிதாக அறிமுகமாகி உள்ளது. மின்னஞ்சல்களை தடை செய்வதில் இது கொஞ்சம் புதுமையான வழியை பின்பற்றுகிற‌து.
பவுன்சர் புதிதாக ஒரு மாற்று மின்னஞ்சலை உருவாக்கித் தாராமல் உங்கள் மின்னஞ்சல் முகவரியையே மாற்றித் தருகிறது. அதாவது பிட்.லே போன்ற மின்னஞ்சல் சுருக்க சேவையை போல இதுவும் மின்னஞ்சல் முகவ‌ரியை சுருக்கி தருகிற‌து.
இதற்காக இந்த தளத்தில் மின்னஞ்சல் முகவ‌ரியை சமர்பித்தவுடன் அதனை அழகாக சுருக்கி தருகிறது. தேவைப்பட்டால் இந்த முகவரியை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
அதன் பிறகு எந்த தளத்தில் மின்னஞ்சல் முகவரியை சம‌ர்பிக்க வேண்டியிருந்தாலும் இந்த சுருக்கமான முகவரியை அளித்தால் போதும்.
பதில் மின்னஞ்சல்கள் பவுன்சர் முகவரி வழியே உங்கள் இன்பாக்சை வந்தடைந்து விடும். ஆனால் உங்கள் உண்மையான மின்னஞ்சல் முகவரி யாருக்கும் தெரியாது. பாதுகாப்பாகவே இருக்கும்.
இந்த தளம் சுருக்கப்பட்ட மின்னஞ்சல் முகவ‌ரியை அதிலிருந்தே டிவிட்டர் அல்லது பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். பவுன்சர் முகவரியை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து விடலாம்.அதே போல எத்தனை முகவரிகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.

Tuesday, March 20, 2012

அனைத்து மென்பொருள்களையும் நிறுவ....

கணணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது, மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.
இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம், ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று.
இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. ஒட்டு மொத்தமாக எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு, ஒரே நேரத்தில் கணணியில் நிறுவி விடலாம்.
நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும்.
உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு, கீழே உள்ள Get Installer என்ற பட்டனை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தற்போது அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்கப்பட்டு, உங்களது கணணியில் நிறுவப்பட்டு விடும்.

Wednesday, March 14, 2012

யாஹூ mail Shortcut Keys...

கணணி உபயோகிக்கும் அனைவரும் தங்கள் செய்யும் செயலை விரைவாக முடிக்க தங்களுக்கு தெரிந்த எளிய Shortcutகளை பயன்படுத்துவர்.
அந்த வகையில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கணக்குக்கும் சில எளிய Shortcut களை பயன்படுத்த முடியும். யாஹூ மின்னஞ்சலுக்கான Shortcut கீழே தரப்பட்டுள்ளன.
Ctrl+Enter: மெயில் அனுப்ப.
N: புதிய மெயில் Compose செய்ய.
R: பதில் அனுப்ப.
A: அனைவருக்கும் பதில் மின்னஞ்சலை அனுப்ப.
L: மின்னஞ்சலை Forward செய்ய.
K: மின்னஞ்சலை படித்த மின்னஞ்சல் என்று மாற்ற.
Ctrl+S: Draft-ல் சேவ் செய்ய.
S: மின்னஞ்சல்களை தேட.

இணையத்தளம் ஒன்றை குறிப்பிட்​ட நேரம் முடக்க.........


மாபெரும் தகவல் களஞ்சியமாக விளங்கும் இணையமானது பல்வேறு வழிகளில் நன்மை பயக்குகின்றபோதும் சில சந்தர்ப்பங்களில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துவதுண்டு.
இதனால் அவ்வாறான இணையத்தளங்களை நாம் நிரந்தரமாக எமது கணினியில் முடக்குவதற்கு வசதி உண்டு. அதேபோல சில இணையத்தளங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.
அதற்கு FocalFilter என்ற மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது. இந்த மென்பொருளை நிறுவி உங்கள் கணினியில் நிறுவி கீழ்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் விரும்பிய இணையத்தளங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு முடக்க முடியும்.
இங்குள்ள இணைப்பிற்கு (http://www.focalfilter.com/) சென்று FocalFilter மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்க. இந்த மென்பொருள் இயங்குவதற்கு Microsoft’s .NET Framework கணினியில் நிறுவப்பட்டிருத்தல் அவசியமாகும்.
1. FocalFilterஐ செயற்படுத்தி அதில் காணப்படும் Edit my Site List என்பதை அழுத்தவும்.
2.அதன்பின் தோன்றும் விண்டோவில் முடக்குவதற்கு விரும்பும் இணையத்தளங்களின் முகரிகளை கொடுத்து Save செய்யவும்.
3.பின்னர் தோன்றும் விண்டோவில் Block for என்பதற்கு அருகில் காணப்படும் பொப்பப் மெனுவை அழுத்தி நேரத்தை தெரிவு செய்து Block my Site List என்பதை அழுத்தவும்.

Monday, March 12, 2012

மொபைல் பேட்டரியின் ஃலைப் அதிகரிக்க....


நம்ம மொபைல் பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் நீண்ட நேரம் இருக்க சில வழிகளை கையாள வேண்டும். அவை என்னென்ன என பார்ப்போமா?

1. மொபைல் சார்ஜ் போடும் போது இடையில் நிறுத்தாமல் முழுமையாக சார்ஜ் போடவும்.


2. முழுமையான சார்ஜ் போட்டு முடித்தவுடன் மின் சப்ளையை துண்டிக்கவும். தொடர்ந்து சார்ஜரை மின் இணைப்பில் வைக்க கூடாது.


3. புளூடூத் வசதியை பயன்படுத்திய பின்னர் புளுடூத்தை சுவிட்ச் ஆப் செய்யவும்.


4. WI-FI தேவையில்லாத சமயங்களில் சுவிட்ச் ஆப் செய்யவும்.


5. 3G வசதி இருந்தாலும் GSM Mode-ஐ யூஸ் செய்யவும். 3G/GSM Mode என இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்து விடும்.


6. மொபைலின் Auto Brightness வசதியை எப்பொதும் ஆப் செய்தே வைக்க வேண்டும்.


7. மொபைல் ரிங் டோன் உடன் சேர்த்தோ அல்லது தேவைப்படாத சமயங்களில் வைப்ரேசன் வசதியை ஆப் செய்யவும்.


8. மொபைல் ஸ்கிரீன் background light நேரத்தை முடிந்த வரை குறைவான நேரத்திற்கு செட் செய்ய வேண்டும்.


9. மொபைல் கேமரா பயன்படுத்தும் போது அதிக நேரம் கடத்தாமல் விரைந்து போட்டோ எடுக்கவும். கேமரா ஆன் செய்து தாமதப்படுத்தினால் சார்ஜ் விரைவில் தீர வாய்ப்பு உண்டு.


10. பின்புலத்தில் ரன் ஆகும் சில அப்ளிகேசன் ப்ரோக்ராம்களை நிறுத்த வேண்டும்.


11. வார்னிங் டோன், கீபேட் பட்டன் டோன், இன்னும் சில தேவையில்லாத அதிகப்படியான டோன்களை ஆப் செய்ய வேண்டும்.


12. மொபைலில் அதிக நேரம் கேம்ஸ் விளையாடுவதை முடிந்தளவு தவிர்க்கவும்.


13. தேவையில்லாமல் நீண்ட பேசுவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.


14. அனிமேட்டட் வால்பேப்பர் படங்களை திரையில் வைக்க வேண்டாம். 


15. கேம்ஸ் விளையாடும் போது வைப்ரேசன், ம்யூசிக் போன்றவற்றை ஆப் செய்ய வேண்டும்.

Wednesday, February 29, 2012

புகைப்படங்களை ஐகான்களாக மாற்ற............

பல்வேறு போர்மட்டுகளில்(PNG, JPG, GIF, BMP) உள்ள புகைப்படங்களை ICO என்ற ஐகான் போர்மட்டுகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது.
கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று தளத்தை ஓபன் செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse என்பதை கிளிக் செய்து உங்கள் கணணியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.
பின் Convert Now என்பதை கிளிக் செய்தால் உங்களது புகைப்படம் ஐகானாக மாற்றப்பட்டு விடும்.
இந்த தளம் விண்டோஸ் 7 இற்கு ஏற்ற ஐகான்களாக மாற்றவும், ஏற்கனவே ஐகான்களாக இருப்பவற்றை புகைப்படங்களாக மாற்றிவிடவும் உதவி புரிகிறது.

புரோகிராமிங் கற்க்க.............

எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது.
வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.
இவை தவிர புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே புரோகிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.
இதன் பெயர் கோட் அகடமி(Code Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங்(coding)எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.
நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும் பாடம், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகநம்மை புரோகிராமிங் என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது.
இது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன.
புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல்பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் புரோகிராமிங் கற்றுக் கொள்ளலாம்.

Thursday, February 23, 2012

ஆபத்து விளைவிக்கும் மொபைல் உபயோகம்........


நம்மில் பலர் நடக்கும் போது Mobile Phone பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும் SMS அனுப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது.
20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் இவர்களை நடக்கவிட்டனர். பின்னர், பார்வையை பாதியாக மறைத்துக் கொண்டு இவர்களை அதே இலக்கை நோக்கி நடக்க விட்டனர். அவர்களின் நடக்கும் தன்மை, வேகம் முதலியன கண்காணித்து அளவெடுக்கப்பட்டன. பின்னர் Mobile Phone-ல் பேசிய படியும், text type செய்த படியும் நடக்கவிடப்பட்டனர்.
இவ்வாறு நடந்த ஆய்வுகளில் தெரிந்த முடிவுகள் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தன. மொபைல் போனில் பேசியபடி நடக்கையில் 16% வேகமும், text type செய்கையில் 33% வேகமும் குறைந்தது. நேராக நடக்காமல் 61% திசை மாறி நடந்து பின்னர் இலக்கினை அடைய முடிந்தது. குறிப்பாக text type செய்கையில் இலக்கை விட்டுவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது.

இதனால் இவர்களின் உணர்திறன் குறைந்தது. செயல் திறன் நினைவு தப்பியது. எந்த இடத்தில் எப்படி செயல்படுகிறோம் என்பதையும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் நிலையையும் இந்த பழக்கங்கள் மறக்கடிக்கச் செய்கின்றன. இவையே பல ஆபத்துக்களை தானாக வலிய வரவேற்கும் வழிகளைத் திறக்கின்றன என இந்த ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளன. ஓடும் கார்களின் பாதையில் செல்வது, திறந்திருக்கும் கழிவுநீர் குழிகளில் விழுவது, மேடு பள்ளங்களில் தடுமாறி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விழுவது போன்ற விளைவுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.  எனவே நடக்கும்போது Mobile பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.

பேஸ்புக் Timelineஐ single நிரலாக அமைப்பதற்கு.......


பிரபல்ய சமூகவலைத்தளமான பேஸ்புக் அண்மையில் தனது புதிய அம்சமான Timelineஐ அறிமுகப்படுத்தியிருந்து. இது வழமையான தோற்றத்திலிருந்து மாறுபட்டு காணப்பட்டதுடன் பதிவுகள், comments என்பன இரு நிரல்களில் அமைந்ததாகவும் காணப்பட்டது.
தற்போது இரு நிரல்களில் காணப்படும் தோற்றத்தினை தனி நிரலாக அமைப்பதற்கு Social Fixer எனும் நீட்சி உதவுகின்றது.
இந்த நீட்சியானது Mozilla Firefox, Google Chrome, Safari போன்ற மென்பொருட்களில் இயங்கக்கூடியதாக காணப்படுவதுடன். Internet Explorerல் மட்டும் தொழிற்படாதுள்ளது.
நன்மைகள்
1. செய்திகளை தேர்ந்தெடுக்கக்கூடிய மேலதிக வசதி.
2. வாசித்த பதிவுகளை மறைக்கும் வசதி.
3. தீம்களை பயன்படுத்த முடியும்.
4. பயனரின் தொழிற்பாடுகளை profileல் இருந்து தானகவே நீக்கும் வசதி.
5. பழைய பதிவுகளை தானாகவே மீட்கும் வசதி. போன்றன காணப்படுகின்றமையாகும்.
Social Fixer மூலம் தனி நிரலுக்கு மாற்றுவது எப்படி?
1. Social Fixerஐ (http://socialfixer.com/) தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.
2. பேஸ்புக் கணக்கை திறக்கவும். அப்போது பேஸ்புக்கிற்கான பல செட்டிங்ஸ் தோன்றும்.
3. அதில் settings என்பதை தெரிவுசெய்து Next பட்டனை அழுத்தவும்.
4. தற்போது தென்படும் குறடு வடிவிலான படத்தை அழுத்தி அதில் காணப்படும் Social Fixer Options என்பதற்கு செல்லவும்.
5. அங்கு காணப்படும் Timeline tab ற்கு சென்று Display Posts in Single Column box என்பதை தெரிவு செய்து தொடரந்து Save செய்து Refresh செய்யவும்.

Wednesday, February 22, 2012

அனுப்பிய மெயிலை நிறுத்த.....gmail

மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன் அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும் நபரின் இன் பாக்ஸுக்கு அந்த மின்னஞ்சல் சென்றுவிடும்.
இணையப் பழக்கவழக்கங்களில் பல வகை மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், இதிலும் ஒரு புதிய வசதியைத் ஏற்படுத்தியுள்ளது. நாம் அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற எண்ணினால், உடனடியாக அதன் சேவையை நிறுத்திவிடலாம்.
இந்த வசதியைப் பயன்படுத்த, மெயிலை அனுப்பிய சில நொடிகளில் செயல்படுத்த வேண்டும். அதிக பட்சம் 30 நொடிகளில் இதனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு Undo Send என்ற பட்டனை அழுத்த வேண்டும். இந்த கட்டளை, மெயிலைப் பெறுபவரின் இன் பாக்ஸில் இருந்து அழிப்பதன் மூலம் நடைபெறுவதில்லை.
மெயில்கள் வரிசையில் நிற்கும்போது அவை தடுக்கப்படுகின்றன. மீண்டும் அனுப்பியவரே, Undo Send என்பதனை நீக்கினால் தான் அந்த மெயில் அனுப்பப்படும். இதனைச் சோதனை செய்திட, நீங்களே உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு மெயிலை அனுப்பி, உடனேயே கேன்சல் செய்து பார்க்கலாம். இந்த வசதி வெப் அடிப்படையில் இயங்கும் ஜிமெயில் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த வசதியைப் பெற முதலில் இதனை இயக்கிவைத்திட வேண்டும். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும். மெயில் தளத்தின் மேலாக, வலது புறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Labs என்னும் டேப்பில் கிளிக் செய்து Undo Send என்னும் டேப் எங்குள்ளது என்று கண்டறியவும். அல்லது, சர்ச் பாக்ஸில் Undo Send என டைப் செய்து, இந்த வசதி தரப்பட்டிருக்கும் இடத்தினை அறியலாம்.
அந்த இடத்தில் உள்ள Enable என்ற பட்டனில் கிளிக் செய்து, பின்னர் Save Changes என்ற பட்டனையும் அழுத்தவும். ஜிமெயில் தளத்தில் மாறா நிலையில் இதற்கு பத்து விநாடிகள் நேரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை 5,10,20,30 நொடிகள் என மாற்றலாம். இந்த நேரத்தினை செட் செய்திட, செட்டிங்ஸ் பக்கத்தில் Undo Send கிளிக் செய்து Send cancellation period என்பதில், நீங்கள் விரும்பும் நேரத்தினை செட் செய்திடலாம்.
இதனை செட் செய்துவிட்டால், ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பிய பின்னரும், ஒரு பாப் அப் விண்டோவில் “Your message has been sent. Undo. View message” என ஒரு செய்தி கிடைக்கும். இதில் உள்ள Undo லிங்க்கில் கிளிக் செய்தால், அப்போது அனுப்பப்பட்ட அஞ்சல் நிறுத்தப்படும்.
ஜிமெயில் வசதியை இணையதள சர்வரின் மூலம் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். ஜிமெயிலின் SMTP அல்லது மற்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களைப் பயன்படுத்துகையில் இந்த வசதி கிடைக்காது.
அனுப்பப்பட்ட மெயிலை நிறுத்தக் கட்டளை கொடுத்த பின்னர், ஜிமெயில் அதற்கான செயல்பாட்டில் இருக்கையில், பிரவுசர் விண்டோவினை மூடினால், அந்த செயல்பாடு மேற்கொள்ளப்படமாட்டாது. அதன் பின்னர் அந்த இமெயில் அனுப்பப்படுவதனை நிறுத்த முடியாது.

விண்டோஸ் 7 பேக் அப்

நாம் கணணியில் அமைத்திடும் தகவல் கோப்புகளை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலையாகும்.
இதற்கெனவே விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர்.
முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும்.
இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்தவில்லை எனில், Backup என்பதன் கீழாக Windows Backup has not been set up என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும்.
இந்த புரோகிராம் தொடங்கியவுடன் உங்கள் பக் அப் கோப்புகளை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும்.
உங்கள் கணணியில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கணணியில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.
இந்த வகையில் பக் அப் கோப்புகளை பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என கணணி உங்களைக் கேட்கும்.
நீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எனில் விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் கோப்பு ஒன்றை பக் அப் கோப்பாக உருவாக்கும் அல்லது இதற்குப் பதிலாக Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து நீங்கள் பக் அப் செய்திட விரும்பும் கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பக் அப் ஆக இருக்கும் கோப்புகளின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும்.
பக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர் விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும்.
அந்த நேரத்தில் கணணி இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால் Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இறுதியாக Save settings கிளிக் செய்து பக் அப் செயல்பாட்டினை இயக்கவும்.
முதல்முதலாக பக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதனை அடுத்து எடுக்கப்படும் பக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.
ஏனென்றால் அடுத்தடுத்து பக் அப் எடுக்கப்படுகையில் மாற்றம் செய்யப்பட்ட கோப்புகளில் மட்டுமே பக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பக் அப் எடுக்கப்பட்ட கோப்புகளுடன் வைக்கப்படும்.

Friday, February 10, 2012

பயிற்சி பெறுவதற்கான தளங்கள்....


Expert Village: இதன் இணையதளமுகவரி http://www.expertvillage.com/ என்பதாகும் இது எந்தவொரு செயலையும் மற்றவர்களின் துனையில்லாமல் நாமே  எவ்வாறு செய்வது என சுயமாக கற்றுக்கொள்வதற்கான மிகப்பெரிய இணையதளமாகும் இந்த தளத்தில் ஏராளமான தலைப்புகளில் ஆயிரக்கணக்கான ஒளிஒலிகாட்சியில் பயிற்சிகள் உள்ளன
  LearnThat.com: இதன் இணையதளமுகவரி http://www.learnthat.com/ என்பதாகும் இந்ததளமானது வியாபாரம்நிதி ,வீட்டு பராமரிப்புகணினிஇதர தெழில்நுட்பம் போன்றவைகளுக்கான பயிற்சியை பெறுவதற்கு உதவுகின்றது
 Koonji: இதன் இணையதளமுகவரி http://www.koonji.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் எதனையும் மிகசுலபமாக அறிந்துகொள்ளவும் தெரிந்தகொள்ளவும் முடியும்
 SuTree: இதன் இணையதளமுகவரி http://www.sutree.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் நமக்குதெரியாததை தெரிந்துகொள்ளவும் நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கவும் முடியும் .
 VideoJug: இதன் இணையதளமுகவரி http://www.videojug.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் பின்னல்தொடர்பான அனைத்து வகை  பயிற்சிகளையும் காட்சியாக கண்ணால் கண்டு செயல்பயிற்சி பெறமுடியும்
 FindTutorials.com: இதன் இணையதளமுகவரி http://www.findtutorials.com/ என்பதாகும் இந்ததளமானது கல்விபொழுதுபோக்கு ,சிறுதிட்டங்களை உருவாக்குதல் என்பன போன்றஅனைத்துவகை பயிற்சிகளையும் பெறஉதவுகின்றது
 TrickLife: இதன் இணையதளமுகவரி என்பதாகும் இந்ததளத்தின் மூலம் நம்முடைய வாழ்க்கையை உடல்நலத்தை மனநலத்தை மேம்படுத்திகொள்ள முடியும்
  Instructables: இதன் இணையதளமுகவரி http://www.tricklife.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம் பயனாளர் விரும்பும் எந்த வகைபயிற்சியையும் இதில் உள்ள ஒலிஒளி காட்சி  மூலம் பெறமுடியும்
 MyTutorials: இதன் இணையதளமுகவரி http://www.mytutorials.com/ என்பதாகும் இந்ததளத்தின் மூலம்  நாம் விரும்பும் பயிற்சியை தேடி பெற்று கற்றுக்கொள்ள முடியும்
 Tutorial Ninjas:இதன் இணையதளமுகவரிhttp://tutorialninjas.net/  என்பதாகும் இந்ததளத்தின் மூலம்  சேமிப்பு தொடர்பான அனைத்து பயிற்சி படிப்புகளும்  பெறமுடியும்
 Hodder Education: இதன் இணையதளமுகவரி http://www.hoddereducation.co.uk/SelfLearningஎன்பதாகும் இந்ததளத்தின் மூலம் விளையாட்டு உடல்நலம் இசை போன்ற வகைகளில் சுயமாக கற்றுக்கொள்வதற்கான பயிற்சிகளை பெறமுடியும்
 Sofia: இதன் இணையதளமுகவரி http://sofia.fhda.edu/index.htm என்பதாகும் இந்ததளத்தின் மூலம் ஆழ்ந்த அறிவுபூர்வமான கருத்துபரிமாற்றங்கள் இலவசமாக  பெறமுடியும்  நிரல்தொடர் எழுதுவதற்கான பயிற்சிஅச்சுக்கோற்பு பயிற்சி,புவியியல் தொடர்பான படிப்புகள் இத்தளத்தில் அதிக அளவில்  கிடைக்கின்றன
 I Can Learn Anything:இதன் இணையதளமுகவரி http://icanlearnanything.com/ என்பதாகும் இதுஒரு கட்டண தளமாகும் ஆயினும் சமூகம் தொடர்பான ஏராளமான பயிற்சிக்கான ஒலிஒலி காட்சி சாதனங்கள்  இங்கு கிடைக்கின்றன
 Wikiversity: இதன் இணையதளமுகவரி http://en.wikiversity.org/wiki/Wikiversity:Main_Page என்பதாகும் இந்ததளத்தில் 10,000  அதிகமான பயிற்சிக்கான ஒலிஒலி காட்சிகள் கட்டளைகள் இலவசமாக கிடைக்கின்றன

ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் இலவசமாக தறவிரக்க .....


ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வெளிவந்த சில காலத்திற்குள்ளே அனைவரின் கைகளிலும் தவழ்கிறது என்றால் பயன்படுத்துவதற்கு எளிமை மற்றும் தொல்லை கொடுக்கும் பிழைகள் மிக மிக குறைவு. பல முக்கியமான ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் அனைத்தும் காசு  கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் ஒரு தளம் முக்கியமான அனைத்து ஆண்ட்ராய்டு அப்ளிகேசனையும் இலவசமாக கொடுக்கிறது 

ஒவ்வொரு ஆண்ட்ராய்டு அப்ளிகேசனையும் தேடி ஒவ்வொரு தளமாக சென்று கடைசியில் 5 டாலர் கொடுங்கள் என்று கேட்கும் பல தளங்களுக்கு மத்தியில் மதிப்பு மிக்க பல ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து எளிதாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.getjar.com/gold
இத்தளத்திற்கு சென்று Gold Android Application அனைத்தையும் பார்க்கலாம் இதில் நமக்கு பிடித்த அப்ளிகேசன் -அருகில் இருக்கும் Free என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக தறவிரக்கலாம். வெளி சந்தையில் கட்டணத்திற்கு கொடுக்கும் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் இங்கு இலவசமாக கொடுக்க காரணம் என்னவென்றால் இத்தளத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் உருவாக்குபவர்கள் இணைந்திருப்பதால் பல மென்பொருட்களை இலவசமாக கொடுக்க முடிகிறது.தளத்தின் மேலே இருக்கும்
Search box -ல் நாம் விரும்பிய அப்ளிகேசனை தேடியும் தறவிரக்கலாம். ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

திறக்க இயலாத கோப்புகளின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு..


பலவகையான கோப்புகளை திறக்க நம் கணணி துணை புரிந்தாலும் சில வகையான கோப்புகளை எந்த மென்பொருளில் திறப்பது என்ற சந்தேகம் வரலாம்.
காரணம் சில வகையான கோப்புகளை இனம் கண்டறிந்து திறப்பது சிரமமாக இருக்கலாம். இப்படி இருக்கும் கோப்புகளின் முழு விபரம் மற்றும் எந்த மென்பொருளில் திறக்காலம் என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் சொல்ல ஒரு தளம் உள்ளது.
பலவகையான காரணத்திற்காகவும் பல வகையான கோப்புகளின் வகைகள்(File Format) உருவாக்கப்பட்டுள்ளது, இதில் நம்மிடம் இருக்கும் கோப்புகளின் File format என்ன என்பதை வைத்து அந்த Format பற்றிய முழுவிபரங்களும் நமக்கு காட்டி ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று நம் கணணியில் திறக்காத கோப்புகளின் Extension -ஐ Search என்ற கட்டத்திற்குள் கொடுத்து தேட வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் தேடிய File Format பற்றிய முழு விபரங்களும் நமக்கு காட்டப்படும், தனித்தனி வகையாக கோப்புகளின் Extension -ஐ வகைப்படுத்தி எளிதாக நமக்கு காட்டுகின்றனர்.
உதாரணமாக ஒரு வீடியோ கோப்பு திறக்கவில்லை என்றால் Video Files என்ற வகையை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் பல வகையான வீடியோ Format பற்றி விரிவாக தெரிந்து கொண்டு எந்த மென்பொருளில் அந்த கோப்பு திறக்கும் என்று எளிதாக அறிந்து கொள்வதோடு அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பும் அதனுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்..




பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

Tuesday, February 7, 2012

Shockwave crashes பிழையை Chrome-ல் சரி செய்வது எப்படி?


Google நிறுவனம் வழங்கும் Chrome browser தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்றவற்றால் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரவுசராகும். அதிகம் பயன்படுத்துபவர்கள் வரிசையில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் இந்தியாவில் முதல் இடத்திலும் உள்ள சிறப்பு மிக்க பிரவுசர் Chrome browser. சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதனை பயன்படுத்தும் பொழுது சில பிழைகளை சந்தித்து இருப்போம். அதில் Shockwave Plug-in crashed என்ற பிழையும் அடிக்கடி உருவாகும். இந்த பிழையை எப்படி சரி செய்வது என பார்ப்போம்.
பிழையை சரிசெய்வது எப்படி:
Adobe flash கணினியில் இரண்டு இடத்தில் install ஆகி இருக்கும். கணினியிலும் (OS Installation), குரோம் உலவியிலும் (Internal Flash Installation) install ஆகி இருக்கும். ஏதாவது ஒரு தளத்தை open செய்யும் பொழுது இவை இரண்டிற்குள் நடக்கும் குழப்பமே இந்த பிழை வரக் காரணமாகிறது. இதில் ஒன்றை (Internal Flash Installation) செயலிழக்க வைத்து விட்டால் இந்தப் பிழை வராமல் தடுக்கலாம்.
  • இதுவரை உங்களுக்கு இந்தப் பிழை ஏற்ப்படவில்லை எனில் நீங்கள் எதுவும் மாற்றம் செய்ய வேண்டாம். பிழை ஏற்ப்படுபவர்கள் குரோம் உலவியை திறந்து address bar-ல்  chrome://plugins என type செய்து enter கொடுக்கவும்.
  • உங்களுக்கு ஒரு window open ஆகும். கீழே படத்தில் காட்டி இருக்கும் இடத்தில் உள்ள + Details என்பதை click செய்யவும்.
அடுத்து கீழே இருப்பதை போல window இருக்கும். அதில் Flash (2 files) என்ற பகுதி கீழே இருப்பதை போல இருக்கும்.
  • Location என்பதில் உள்ள URL வைத்து இரண்டையும் சுலபமாக வேறுபடுத்தி பார்க்கலாம். மேலே படத்தில் காட்டியுள்ள (Chrome Internal Installation) பகுதியில் உள்ள Disable என்பதை click செய்யவும்.
  • Disable click செய்தவுடன் உங்கள் window கீழே இருப்பதை போல இருக்கும்.
  • Disable செய்தவுடன் உங்களுடைய window-வை மூடிவிட்டு திரும்பவும் open செய்து கொள்ளவும். இனி இந்த பிழை ஏற்படாது.
Note1: இதனை disable செய்வதால் Chrome browser-ன் புதிய பதிப்பு வெளியிட்டவுடன் automatic update  ஆகாது. புதிய பதிப்பை நீங்களே download செய்து install செய்யவேண்டும்.
Note2: Chrome உலவியை update செய்து விட்டால் இந்த நீட்சி திரும்பவும் வேலை செய்ய ஆரம்பித்து விடும். திரும்பவும் இதை Disable செய்யவேண்டும்.

thanks tech tamil...