பிரபல்ய சமூகவலைத்தளமான பேஸ்புக் அண்மையில் தனது புதிய அம்சமான Timelineஐ அறிமுகப்படுத்தியிருந்து. இது வழமையான தோற்றத்திலிருந்து மாறுபட்டு காணப்பட்டதுடன் பதிவுகள், comments என்பன இரு நிரல்களில் அமைந்ததாகவும் காணப்பட்டது. தற்போது இரு நிரல்களில் காணப்படும் தோற்றத்தினை தனி நிரலாக அமைப்பதற்கு Social Fixer எனும் நீட்சி உதவுகின்றது. இந்த நீட்சியானது Mozilla Firefox, Google Chrome, Safari போன்ற மென்பொருட்களில் இயங்கக்கூடியதாக காணப்படுவதுடன். Internet Explorerல் மட்டும் தொழிற்படாதுள்ளது. நன்மைகள் 1. செய்திகளை தேர்ந்தெடுக்கக்கூடிய மேலதிக வசதி. 2. வாசித்த பதிவுகளை மறைக்கும் வசதி. 3. தீம்களை பயன்படுத்த முடியும். 4. பயனரின் தொழிற்பாடுகளை profileல் இருந்து தானகவே நீக்கும் வசதி. 5. பழைய பதிவுகளை தானாகவே மீட்கும் வசதி. போன்றன காணப்படுகின்றமையாகும். Social Fixer மூலம் தனி நிரலுக்கு மாற்றுவது எப்படி? 1. Social Fixerஐ (http://socialfixer.com/) தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். 2. பேஸ்புக் கணக்கை திறக்கவும். அப்போது பேஸ்புக்கிற்கான பல செட்டிங்ஸ் தோன்றும். 3. அதில் settings என்பதை தெரிவுசெய்து Next பட்டனை அழுத்தவும். 4. தற்போது தென்படும் குறடு வடிவிலான படத்தை அழுத்தி அதில் காணப்படும் Social Fixer Options என்பதற்கு செல்லவும். 5. அங்கு காணப்படும் Timeline tab ற்கு சென்று Display Posts in Single Column box என்பதை தெரிவு செய்து தொடரந்து Save செய்து Refresh செய்யவும். |
Thursday, February 23, 2012
பேஸ்புக் Timelineஐ single நிரலாக அமைப்பதற்கு.......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment