Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, February 22, 2012

விண்டோஸ் 7 பேக் அப்

நாம் கணணியில் அமைத்திடும் தகவல் கோப்புகளை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலையாகும்.
இதற்கெனவே விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு தனி வசதியினை அளித்துள்ளது. இதனை Backup and Restore என அழைக்கின்றனர்.
முதலில் சிஸ்டத்தில் உள்ள இந்த Backup and Restore வசதியினை இயக்க வேண்டும். இதனை Control Panel பகுதியில் System and Security என்பதைக் கிளிக் செய்து பெறலாம். Backup and Restore என இந்த வசதி தரப்பட்டிருக்கும்.
இந்த வசதியினை இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்தவில்லை எனில், Backup என்பதன் கீழாக Windows Backup has not been set up என்ற ஒரு செய்தி தரப்படும். இந்த செய்தியின் வலது புறமாக உள்ள Set up backup என்ற லிங்க்கின் மீது கிளிக் செய்திட வேண்டும்.
இந்த புரோகிராம் தொடங்கியவுடன் உங்கள் பக் அப் கோப்புகளை எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டும் என்ற ஆப்ஷன் கேட்கப்படும்.
உங்கள் கணணியில் உள்ள முதன்மை ஹார்ட் ட்ரைவினை பக் அப் ட்ரைவாக தேர்ந்தெடுக்க, விண்டோஸ் சிஸ்டம் இடம் தராது. எக்ஸ்டர்னல் ட்ரைவ் ஒன்றினை கணணியில் இணைத்து Refresh என்பதில் கிளிக் செய்திடவும்.
இந்த வகையில் பக் அப் கோப்புகளை பதியப்பட வேண்டிய ட்ரைவினைத் தேர்ந்தெடுத்து செட் செய்த பின்னர், எந்த கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என கணணி உங்களைக் கேட்கும்.
நீங்கள் எதனையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை எனில் விண்டோஸ் தானாக, ஹார்ட் ட்ரைவின் இமேஜ் கோப்பு ஒன்றை பக் அப் கோப்பாக உருவாக்கும் அல்லது இதற்குப் பதிலாக Let me choose என்ற பட்டனில் கிளிக் செய்து நீங்கள் பக் அப் செய்திட விரும்பும் கோப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
எந்த ட்ரைவில் பதிய வேண்டும் என்பதனையும், எந்த வகை கோப்புகளை பக் அப் செய்திட வேண்டும் என்பதனையும் தேர்ந்தெடுத்த பின்னர், சிஸ்டம் உங்களுக்கு பக் அப் ஆக இருக்கும் கோப்புகளின் தொகுப்பு திரை ஒன்றைக் காட்டி உறுதி செய்திட கேட்கும்.
பக் அப் செயல்பாடு தொடங்கும் முன்னர் விண்டோஸ் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள தான் அமைத்துள்ள கால நேரத்தினைக் காட்டும்.
அந்த நேரத்தில் கணணி இயக்க நிலையில் இருப்பதனை உறுதி செய்திட இந்த கேள்வி கேட்கப்படும். இதில் மாற்றம் தேவை என நீங்கள் கருதினால் Change schedule என்பதில் கிளிக் செய்து, உங்களுக்கு வசதியான நேரத்தினை அமைக்கவும். இறுதியாக Save settings கிளிக் செய்து பக் அப் செயல்பாட்டினை இயக்கவும்.
முதல்முதலாக பக் அப் எடுக்கையில், சிறிது கூடுதலாகவே நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதனை அடுத்து எடுக்கப்படும் பக் அப் செயல்பாட்டிற்குக் குறைந்த அளவிலேயே நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.
ஏனென்றால் அடுத்தடுத்து பக் அப் எடுக்கப்படுகையில் மாற்றம் செய்யப்பட்ட கோப்புகளில் மட்டுமே பக் அப் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்கனவே பக் அப் எடுக்கப்பட்ட கோப்புகளுடன் வைக்கப்படும்.

No comments:

Post a Comment