”என்னோட லேப்டாப் ரொம்பவும் ஸ்லோ ஆயிட்டதாலே லைஃபே ஸ்லோ ஆன மாதிரி ஒரு ஃபீலிங்…, ஒரு முறை விண்டோஸை ரீ-இன்ஸ்டால் செய்து பார்க்கணும்.” என்று எனக்கு தெரிந்த நபர் ஒருவர் அங்கலாய்க்க, அவர் கூற்றில் சற்று மேல் உண்மை இருப்பதாக உணர்ந்தேன். அதாவது இன்றைய காலகட்டத்தில் நமது கணினி தனது முழு திறனுடன் வேலை செய்தால்தான் நாமும் நமது முழு திறனுடன் செயல்படுவது போல் நமக்கு சில சமயத்தில் தோன்றும். என்னதான் நல்ல கான்ஃபிகரேஷனுடன் கணினியை வாங்கியிருந்தாலும், தினமும் உபயோகிக்க உபயோகிக்க, கணினியின் வேகம் படிப்படியாக குறைந்து கொண்டே போவது போல் ஒரு உணர்வு பலருக்கும் உண்டு.
ஆனால் அதற்காக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அவ்வப்பொழுது ரீ-இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதாவது உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிகவும் மோசமாக கரப்ட் ஆகாமலிருந்தால் அதை ரீ-இன்ஸ்டால்தான் செய்து ஆக வேண்டும் என்கிற கட்டாயமில்லை. அது மட்டுமல்லாமல், உங்கள் கணினியின் செயல் திறன் மாதாமாதம் குறைந்து கொண்டே போக அனுமதித்து விட்டு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ரீ-இன்ஸ்டால் செய்வதை விட, உங்கள் கணினி தினமும் முழு திறனுடன் அருமையாக செயல்படுமாறு பார்த்துக் கொள்வதே சிறந்தது.
ரொம்ப சரிதான்! கணினி தன் முழு திறனுடன் செயல்படுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டோம். ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்பதுதான் இப்பொழுது கேள்வி. இங்கே முக்கியமானது என்னவென்றால் கணினி முன்னாலான நமது நேரம் முழுவதையும், அதை சரி செய்வதிலேயே செலவிடக் கூடாது ! மினிமம் பெய்ன்! மேக்ஸிமம் கெய்ன்! இது எப்படி நம்மால் சாத்தியப்படக்கூடும் என்று இப்பொழுது சுருக்கமாக காண்போம்.
1. முதலாவது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட்டடாக வைத்திருக்க வேண்டும். அதாவது செக்யூரிட்டி அப்டேட் அவ்வப்பொழுது என்ன இருக்கிறதோ அதை நிறுவிக் கொள்ள வேண்டும். உங்கள் கணினியில் இருப்பது விண்டோஸ் எக்ஸ்.பி. என்றால், விஸ்டா மற்றும் வின்டோஸ் 7 என்று புதிதாக நிறுவ வேண்டும் என்று இதற்கு பொருள் இல்லை. எக்ஸ்.பி. செக்யூரிட்டி அப்டேட்டுகளை அவ்வப்பொழுது நிறுவிக் கொண்டால் போதுமானது . இதனால் நமது நேரமும் முயற்சியும் அதிகமாக செலவு ஆகாதா? ஆகாது! ஆட்டொமேட்டிக் அப்டேட்டை கான்ஃபிகர் செய்து கொண்டால் போதுமானது. விண்டோஸ் தானே அவ்வப்பொழுது செக்யூரிட்டி அப்டேட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்வதோடு கணினியில் நிறுவவும் செய்யும். உங்கள் கணினியில் ஒரிஜினல் விண்டோஸ் இல்லை எனில், உபண்டு போன்ற இலவச லீனக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நிறுவிக் கொள்ளவதைப் பற்றி சிந்தியுங்கள்! (உபண்டு-விலும் அப்டேட்டுகளுக்கான நோட்டிஃபிகேஷன்கள் உண்டு!)
2. இரண்டாவது, கணினியில் வைரஸ் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காஸ்பர்ஸ்கி, ஏ.வி.ஜி. போன்ற ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் நியாயமான விலையில் கிடைக்கின்றது. இலவச ஆன்டி வைரஸ் வேண்டும் என்றாலும் ஏ.வி.ஜி. ஃபிரீ, கொமோடோ போன்றவைகள் உள்ளன. பதிவிறக்கம் செய்து உபயோகிக்கவும். முக்கியமாக ஆன்டி வைரஸ் டெஃபெனிஷன்களை அவ்வப்பொழுது புதுப்பிக்கவும்.
3. தேவையற்ற கோப்புகளை அவ்வப்பொழுது நீக்கவும். முக்கியமாக தற்காலிகமாக உருவாகும் கோப்புகளை நீக்கவும். இதற்காக விண்டோசிலேயே உள்ள டிஸ்க் கிளீனப் யுடிலிட்டியை உபயோகப்படுத்துங்கள். வேண்டுமானல் இந்த டிஸ்க் கிளீனப் யுடிலிட்டியை டாஸ்க் ஷெட்யூலரின் வாயிலாகவும் இயக்கலாம்!
4. கணினி இயங்கும் பொழுது பல வகையான கோப்புகளை ஹார்ட் டிஸ்கிலிருந்து உபயோகப்படுத்தும் அதாவது கோப்புகளில் இருந்து படிக்கவும் எழுதவும் செய்யும். நாளடைவில் கோப்புகள் ஒவ்வொன்றும் ஹார்ட் டிஸ்கில் ஒரே இடத்தில் கோர்வையாக இல்லாமல் நொறுங்குண்டு பல இடங்களில் சங்கிலித் தொடராக அமையப்பெறும். அவ்வாறு நொறுங்குண்ட கோப்புகளில் இருந்து தகவலை படிப்பதற்கும், எழுதுவதற்கும் காலம் தேவைக்கு அதிகமாக செலவாகும். இந்த நிலையை சரி செய்ய, ஹார்டு டிஸ்கு டிரைவுகளை டிஃபிராக்மெண்ட் செய்யுங்கள். இந்த டிஃபிராக்மென்டேஷன் பணி நேரத்தை மிகவும் விழுங்குவதால், டிஃபிராக்மென்டரை துவக்கி விட்டபின் மணிக்கணக்கில் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது! கணினி அல்லாது வேறு வேலையில் ஈடுபடத் தொடங்கும் முன் (உணவருந்தும் முன்?) டிஃபிராக்மென்டரை துவக்கி விட்டுச் செல்லுங்கள்!!
மேற்கண்ட நான்கையும் அவ்வப்பொழுது செய்து வந்தால் கணினியில் செயல் வேகம் குறைவதை தடுக்கலாம்! நாமும் முழுத் திறனுடன் செயல்படும் ஒரு உணர்வைப் பெறலாம்!!
No comments:
Post a Comment