headlines
Wednesday, February 28, 2018
Saturday, August 10, 2013
சூரியப் படலத்தில் இயங்கும் மடிக்கணனி ...............
தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணனிகளின் அளவு சுருங்கி இன்று டேப்லட் வரை சிறிதாக மாறியுள்ளது.
இந்நிலையில் அவற்றின் பாவனையை மேலும் இலகுபடுத்தும்பொருட்டு மேலும் பல தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டுவருகின்றன.
அதற்கிணங்க தற்போது சூரியப் படலத்தில் செயற்படக்கூடிய மடிக்கணனிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் நீடித்து செயற்படக்கூடிய மின்கலம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் 2 மணிநேரம் சூரிய ஒளியில் வைத்த பின்னர் சுமார் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக செயற்படக்கூடிய சக்தியை குறித்த மின்கலம் வழங்குகின்றது.
இந்நீண்ட பாவனையின் பொருட்டு இக்கணனிகளில் Ubuntu இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.
WeWi Telecommunications எனும் கனடிய நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இக்கணனிகளின் விலையானது 300 டொலர்கள் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 2 மணிநேரம் சூரிய ஒளியில் வைத்த பின்னர் சுமார் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக செயற்படக்கூடிய சக்தியை குறித்த மின்கலம் வழங்குகின்றது.
இந்நீண்ட பாவனையின் பொருட்டு இக்கணனிகளில் Ubuntu இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.
WeWi Telecommunications எனும் கனடிய நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இக்கணனிகளின் விலையானது 300 டொலர்கள் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது
Saturday, June 9, 2012
Reset Firefox
கணணியில் ஒரு மென்பொருளை தொடர்ந்து உபயோகித்து கொண்டிருக்கும் பொழுது அதன் வேகம் குறைந்து போவது இயல்பு தான்.
இது உலாவிகளுக்கும் பொருந்தும், இந்த வகையில் நீங்கள் பயர்பொக்ஸ் உலாவியை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்களா? ஆரம்பத்தில் இருந்த வேகம் படிப்படியாக குறைந்து இப்பொழுது பயர்பொக்ஸ் உலாவி நிதானமாக இயங்குகிறதா? அடிக்கடி கிராஷ் ஆகிறதா?
இந்த பிரச்சினைகளை நீக்கி மீண்டும் பயர்பொக்ஸ் உலாவியை பழைய வேகத்தில் இயங்க வைக்க முடியும். இதற்கு பயர்பொக்சின் புதிய Reset Firefox என்ற வசதி உதவுகிறது.
இதற்கு முதலில் பயர்பொக்ஸ் உலாவியை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் Help - Troubleshooting Informations பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்கு ஒரு விண்டோ திறக்கும், அதில் Reset Firefox என்ற ஒரு பட்டன் இருக்கும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
அடுத்த விண்டோவில் உங்களின் இறுதி அனுமதியை கேட்கும், அதில் உள்ள Reset Firefox என்ற பட்டனை அழுத்தவும்.
ஒரு சில வினாடிகளில் உங்களுடைய உலாவியில் இருந்த பிழைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு புதிய உலாவி தயாராகி விடும்.
Reset Firefox வசதியை பயன்படுத்துவதால் உங்கள் பயர்பொக்ஸ் உலவியில் சேமித்து வைத்துள்ள Bookmarks, Cookies, Passwords, History அனைத்தும் அழிந்து விடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
அறிமுகமாகின்றது சிறிய கணணிகள்: AMD LiveBox:
தொழில்நுட்பத்தில் ஏற்படும் விரைவான வளர்ச்சிக்கு அமைய கணணிகளின் பருமனும் சிறிதாகிக் கொண்டே செல்கின்றது. அதேவேளை வினைத்திறன் கொண்டதாகவும் அமைந்து வருகின்றது.
இதன் அடிப்படையில் AMD நிறுவனமானது LiveBox எனப்படும் மிகச்சிறிய கணணிகளை அறிமுகப்படுத்துகின்றது.
1GB முதன்மை நினைவகத்தைக்(RAM) கொண்டு செயற்படவுள்ள இக்கணினிகள் 1GHz AMD dual core C-60 புரோசசர்களைக் கொண்டுள்ளன.
மேலும் 1080 பிக்சல்கள் அளவிலான உயர் திறனுடைய விம்பங்களை உருவாக்கக்கூடிய திரைகளையும் கொண்டுள்ளது.
இவற்றில் 64GB கொள்ளளவு கொண்ட solid state disk (SSD) எனப்படும் துணை நினைவகம் பொருத்தப்பட்டுள்ளதுடன் 2 x USB 2.0 ports, 1 x HDMI output, Ethernet, memory card, புரோட்பான்ட் இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான SIM slot, புளூடூத் ஆகிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Posts (Atom)