Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, March 8, 2012

அறிமுகமாகின்றது 41MP கமரா:கைத்தொலைபேசி


தினமும் மாற்றங்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப உலகில் பிரமிக்கவைக்கும் 41MP(மெகாபிக்ஸெல்) கமராவுடன் அறிமுகமாகின்றது நோக்கியா 808 பியோ வியூ (Nokia 808 Pure View).

கடந்த மாதம் இடம்பெற்ற தொழில்நுட்ப கண்காட்சியொன்றில் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வகை கைத்தொலைபேசியானது அசத்தலான 41MP(மெகா பிக்ஸெல்) கமரா வசதியைக் கொண்டிருக்கும் என்றும் இது பெல்லி(Belle) என புதிதாக பெயரிடப்பட்டுள்ள சிம்பியன்(Symbian) இயங்குதளத்தில் இயங்கும் எனவும்
கூறப்பட்டுள்ளது. மேலும் இக்கைத்தொலைபேசி தொடுதிரை(Touch Screen) வசதி, முகப்புக் கமரா, (Front Camera), ப்ளூடூத்(Bluetooth) Version-3, Wi-Fi, போன்ற வசதிகளையும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள NFC (Near Field Communication) எனப்படும் வசதியையும் கொண்டுள்ளது. NFC எனப்படுவது தரவுகள் மற்றும் கோப்புகளை பரிமாற்றம் செய்யும் வசதியாகும். இதற்கு NFC வசதியுள்ள இரு சாதனங்களும் மிகமிக அண்மையில் இருப்பது அவசியம்.
இக்கைத்தொலைபேசி 16GB உள்ளக நினைவகம்(Internal Memory), 14.4MB இணையவழி தரவிறக்க வேகம்(Downloading Speed), ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன் 1.3GHz வேகத்துடன் கூடிய ARM வகை மையச்செயலியில்(Processor) இயங்குவது சிறப்பம்சமாகும். மேலும் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ள 808 பியோ வியூ(Nokia 808 Pure View) ஆனது வைகாசி(May) மாதம் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment