Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, June 9, 2012

Reset Firefox

கணணியில் ஒரு மென்பொருளை தொடர்ந்து உபயோகித்து கொண்டிருக்கும் பொழுது அதன் வேகம் குறைந்து போவது இயல்பு தான்.
இது உலாவிகளுக்கும் பொருந்தும், இந்த வகையில் நீங்கள் பயர்பொக்ஸ் உலாவியை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்களா? ஆரம்பத்தில் இருந்த வேகம் படிப்படியாக குறைந்து இப்பொழுது பயர்பொக்ஸ் உலாவி நிதானமாக இயங்குகிறதா? அடிக்கடி கிராஷ் ஆகிறதா?
இந்த பிரச்சினைகளை நீக்கி மீண்டும் பயர்பொக்ஸ் உலாவியை பழைய வேகத்தில் இயங்க வைக்க முடியும். இதற்கு பயர்பொக்சின் புதிய Reset Firefox என்ற வசதி உதவுகிறது.
இதற்கு முதலில் பயர்பொக்ஸ் உலாவியை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் Help - Troubleshooting Informations பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்கு ஒரு விண்டோ திறக்கும், அதில் Reset Firefox என்ற ஒரு பட்டன் இருக்கும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
அடுத்த விண்டோவில் உங்களின் இறுதி அனுமதியை கேட்கும், அதில் உள்ள Reset Firefox என்ற பட்டனை அழுத்தவும்.
ஒரு சில வினாடிகளில் உங்களுடைய உலாவியில் இருந்த பிழைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு புதிய உலாவி தயாராகி விடும்.
Reset Firefox வசதியை பயன்படுத்துவதால் உங்கள் பயர்பொக்ஸ் உலவியில் சேமித்து வைத்துள்ள Bookmarks, Cookies, Passwords, History அனைத்தும் அழிந்து விடும் என்பதை நினைவில் கொள்ளவும்.


அறிமுகமாகி​ன்றது சிறிய கணணிகள்: AMD LiveBox:

தொழில்நுட்பத்தில் ஏற்படும் விரைவான வளர்ச்சிக்கு அமைய கணணிகளின் பருமனும் சிறிதாகிக் கொண்டே செல்கின்றது. அதேவேளை வினைத்திறன் கொண்டதாகவும் அமைந்து வருகின்றது.
இதன் அடிப்படையில் AMD நிறுவனமானது LiveBox எனப்படும் மிகச்சிறிய கணணிகளை அறிமுகப்படுத்துகின்றது.
1GB முதன்மை நினைவகத்தைக்(RAM) கொண்டு செயற்படவுள்ள இக்கணினிகள் 1GHz AMD dual core C-60 புரோசசர்களைக் கொண்டுள்ளன.
மேலும் 1080 பிக்சல்கள் அளவிலான உயர் திறனுடைய விம்பங்களை உருவாக்கக்கூடிய திரைகளையும் கொண்டுள்ளது.
இவற்றில் 64GB கொள்ளளவு கொண்ட solid state disk (SSD) எனப்படும் துணை நினைவகம் பொருத்தப்பட்டுள்ளதுடன் 2 x USB 2.0 ports, 1 x HDMI output, Ethernet, memory card, புரோட்பான்ட் இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான SIM slot, புளூடூத் ஆகிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கைபேசிகளுக்கான முழுமையான உலாவி: Skyfire

பொதுவாக கைபேசி உலாவிகளில் இணையத்தளங்கள் முழுமையாக தெரியாது, குறிப்பாக இணைய பக்கங்களில் வீடியோக்களை காண முடியாது.
இது போன்று சில குறைபாடுகள் கைபேசி உலாவியில் உண்டு. ஸ்கைபயர்(Skyfire) கணணியில் இணையத்தளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் கைபேசி உலாவியில் இணையத்தளங்கள் தெளிவாக தெரிகின்றன.
யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணணியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.
ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இயங்குதளத்தை உபயோகிக்கும் கைபேசிகளுக்கென்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை கைபேசிகளையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.
மிக குறிப்பாக தமிழ் இணையத்தளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற கைபேசி உலாவிகளில் தமிழ் இணையத்தளங்களை பார்க்க முடியாது.
ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.
நீங்கள் கைபேசியில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.
உங்கள் கணணியில் தரவிறக்கிய பின் உங்கள் கைபேசிக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள்.
நேரடியாக உங்கள் கைபேசியில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து m.skyfire.com இந்த முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.

Sunday, June 3, 2012

புதிய புரட்சிகர Li-fi தொழில்நுட்பம் .....



இன்டர்நெட் தொழிநுட்பத்தில் மறக்க முடியா பெயர் Wi-fi. வயர் இல்லாமல் இன்டர்நெட் உபயோகிக்க பயன்படுத்தும் இந்த தொழில்நுட்பத்திற்கு விடை கொடுக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.

டாக்டர்கள் முஸ்தபா அப்கனி, கார்டன் போவே மற்றும் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் ஆகியோரின் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புரட்சிகர Li-fi தொழில்நுட்பம் எதிர்க்கால இன்டர்நெட் உலகை மாற்றியமைக்க போவதாக அறிவியல் உலகம் கருதுகின்றது.

wifi தொழில்நுட்பத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது ரேடியோ அலைவரிசை சிக்னல்களை உபயோகிப்பது தான். இந்த சிக்னல்கள் மற்ற அலைவரிசையுடன் குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுத்த கூடாது என்பதற்காக தான் விமானம், மருத்துவமனை போன்றவற்றில் wifi-யை தடை செய்கின்றனர்.

Visible light communication (VLC) என்று அழைக்கப்படும் Lifi தொழில்நுட்பத்தில், ஒளியை கொண்டு தகவல்கள் அனுப்படுவதால் மேலே கூறிய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. மேலும் தண்ணீருக்கு அடியிலும் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.



இன்னும் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த தொழில்நுட்பம் wifi-யை விட ரொம்ப விலை மலிவானது. மேலும் மிக வேகமானதும் கூட. 10 Gbps வரை இதன் வேகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 1.5 hrs ஓடக்கூடிய ஒரு High Definition வீடியோவை 30 நொடிகளில் டவுன்லோட் செய்திடலாம்.

இன்னும் ஐந்து வருடங்களில் இந்த தொழில்நுட்பம் நம் கணிப்பொறிகள் மற்றும் மொபைல் போன்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும் என்று சமீபத்திய EFY (Electronics for You) இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் இருப்பது போல இதிலும் குறைகள் உண்டு. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் வேகத்தில் தலைச்சிறந்து இருப்பதால் அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியிருக்கின்றனர்.