Pages

Subscribe:

Ads 468x60px

Thursday, December 29, 2011

ஜி.எஸ்.எம் மூலம் இயங்கும் கையடக்கத்தொலைபேசிப் உபயோகிப்போர்களுக்கு புதிய அச்சுறுத்தல்

உலகில் அதிகமானோர் பாவிக்கும் கையடக்கத்தொலைபேசிகள் ஜி.எஸ்.எம் எனப்படும் (Global System for Mobile Communications) தொழிநுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.
புள்ளிவிபரங்களின் படி உலகத் தொலைபேசிகளில் 80% இத்தொழில்நுட்பத்தின் மூலமே இயங்குகின்றது.

இந்நிலையில் ஜேர்மனிய நாட்டு ஆராய்ச்சி அமைப்பான Security Research Labs இன் தலைவரான கார்ஸ்டன் நோஹல் ஜி.எஸ்.எம். கையடக்கத்தொலைபேசிகளில் காணப்படும் பாதுகாப்புப் குறைபாடு தொடர்பில் ஆய்வறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன் படி ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் இயங்கும் அனைத்து கையடக்கத்தொலைபேசிகளிலும் பாதுகாப்புக் குறைபாடு காணப்படுவதாகவும் இதன் மூலம் எமது கையடக்கத்தொலைபேசிகளிலிருந்து நாம் அறியாதவகையில் அழைப்புகளை மேற்கொள்ளமுடிவதுடன்,
குறுந்தகவல்களையும் அனுப்பமுடியுமென நோஹல் எச்சரிகை விடுத்துள்ளார்.
அதாவது நமது கையடக்கத்தொலைபேசிகள் நாம் அறியாத வகையில் ஹெக்கர்களின் கைகளுக்குள் சிக்குவதாகும்
இப்பாதுகாப்புக் றைபாட்டின் மூலம் குறைந்த மணித்தியாலத்தில் அதிக கையடக்கத்தொலைபேசிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஹெக்கர்களால் முடியுமென நோஹல் குறிப்பிட்டுள்ளார்
பொதுவாக சி.டி.எம்.ஏ உட்பட மற்றைய வலையமைப்புகளை விட ஜி.எஸ்.எம் ஆனது பாதுகாப்பாகக் கருதப்படுகின்றது
எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தியானது பாவனையாளர்களுக்கும், சேவை வழங்குநர்களுக்கும் சற்று அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.
ஸ்மார்ட் போன்களின் விற்பனையானது தற்காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளமையானது ஹெக்கர்களின் கவனத்தினை மொபைல்உலகத்தினை நோக்கித் திருப்பியுள்ளது.

அமைதி......


ஒரு குட்டிக்கதையும் அமைதியின் அர்த்தமும்.

அரசன் ஒருவன் ஒரு தனது நாட்டிலுள்ள ஓவியர்களுக்கெல்லாம் ஒரு போட்டிஅறிவித்தான், அமைதி என்று தலைப்பிட்டு அதற்க்கு ஏற்றவாறு யார் ஓவியம்வரைகிரார்களோ அவர்களுக்கு பரிசு என்று.

பல ஓவியர்கள் போட்டியில் பங்கு பற்றினர். அரசனும் ஒவ்வொரு ஓவியமாகபார்த்துக்கொண்டு வந்தான் , இறுதியில் அவனுக்கு இரண்டு ஓவியங்களைபிடித்திருந்தது. ஆனால் ஒன்றைத்தான் தெரிவு செய்ய வேண்டும் ஆகவேதிரும்பவும் அவ்வோவியங்களை பார்த்தான்.

முதலாவது ஓவியம் - இதிலே ஒரு சலனமற்ற குளம், சுற்றிவர எந்தவிதஆர்ப்பாட்டமுமில்லாத மலைத்தொடர், மரங்கள் , மேலே நீல வானம் அதிலேஇடையிடையே வெண்முகில்கள். பார்த்தவுடனே அனைவரையும் கவரும்விதத்தில் இருந்தது அவ்வோவியம்.

இரண்டாவதோ - இதிலும் மலை; ஆனால் அத்தனை அழகான மலை இல்லை , வானமும் மிகவும் கோவத்துடன் இருந்தது கருமுகில் சூழ்ந்து மலைபெய்துகொண்டிருந்தது, மலையிலிருந்து ஒரு நீர்வீழ்ச்சி. மொத்தத்தில் இத்தனைபார்க்கும் போதே காதில் இரைச்சல் கேக்கும் போல் இருந்தது . ஆனால்அப்போதுதான் அரசன் அவ்வோவியத்தை கூர்ந்து பார்த்தான். அதிலே அந்தநீர்வீழ்ச்சிக்கு அருகிலே ஒரு சிறிய மரம் இருந்தது அதிலே ஒரு குருவியின் கூடுஇருந்தது, கூட்டிலே ஒரு தாய்க்குருவி எந்தவித சலனமுமில்லாமல்அமைதியாக இருந்தது. 

அரசனும் அந்த ஓவியத்திற்கே பரிசினை வழங்கிவிட்டு இவ்வாறு கூறினான்

"அமைதி என்பது சத்தமும் ஆர்ப்பாட்டமும் கஷ்டங்களும் இல்லாத இடத்தில்இல்லை, இவ்வளவும் நிறைந்த அந்த இடத்திலே எந்தவித பயமோ சலனமோஇன்றி இருக்கும் இதயத்தில்தான் இருக்கிறது"

Wednesday, December 28, 2011

Upgraded version in Aakash Tablet -UBISLATE 7 [Pre-Booking]


The much awaited India’s ultra low cost Aakash tablet is finally come to sale. The team of engineers at Datawind has come up with the upgraded version of the Aakash tablet. This upgraded version of Aakash is called Ubislate 7. This will be introduce in Jan 2012. The CEO of DataWind, Mr. Suneet Singh Tuli says ‘This is a made-in-India product. Thank you for giving me the opportunity to do this.’ He adds, ‘The final goal is to either provide the same features at a lower cost or provide better functionality and features at the same cost.


Comparison table between Aakash Tablet and UBISLATE 7

SpecificationsAakashUbiSlate 7 (The upgraded version of Aakash)

Availability

NOW!


Late January
Pricing
Rs.2,500
Rs.2,999

Microprocessor

Arm11 – 366Mhz
Cortex A8 – 700 Mhz
Battery
2100 mAh
3200 mAh

OS

Android 2.2

Android 2.3

Network
WiFi
WiFi & GPRS (SIM & Phone functionality)


Some features on UBISLATE 7:
  • High quality web anytime and anywhere.
  • Connect GPRS or WiFi.
  • GPRS: Embeded Modem eliminates the need for external dongles and allow Internet Access everywhere.
  • WiFi: Allow fast youtube videos at hotspots.
  • Fast web access even on GPRS networks, across the country using Datawind's patented acceleration technology.
  • Web,Email, Facebook, Twitter and much more.
  • Games full office suite, Educational Softwares, Over 150,000 apps available.
  • Expandable memory to 32GB.
  • Use can use any ordinary pen-drive
  • And it's a phone to make/receive voice calls.
How to Pre-Book UBISLATE 7:
Go to this link and fill your form and hit submit button that's all. Your request sent to Datawind sales team and they sent you confirmation email with booking number.
apply

After this Released the sales team contact you your given email ID or Mobile shortly. Payment method is cash on delivery.

AVG Anti Viurs 2012 இலவசமாக ......


 நாம் பல்வேறு வகையான இலவச Anti Virus மென்பொருட்களை உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறோம். இதில் இந்த AVG Anti Virus மென்பொருளும் மிகப்பிரபலமானது. கணினியில் தீங்கிழைக்கும் பைல்களை கண்டறிந்து சரியாக நீக்குகிறது என்பதால் உலகளவில் பெரும்பாலான கணினிகளில் உபயோகப் படுத்தப்படுகிறது.  இப்பொழுது இதன் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளனர் அது தான் AVG Anti Virus 2012. புதிய பதிப்பில் வைரஸ்களை கண்டறிய பல நுட்பங்களை புகுத்தி உள்ளனர்.


மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
  • உலகளவில் 98 மில்லியன் கணினிகளில் இந்த மென்பொருள் உபயோகப் படுத்தப்படுகிறது.
  • இலவச ஆன்டி வைரஸ் மென்பொருட்களில் பல சோதனைகளில் வெற்றி பெற்று பல விருதுகளை வாங்கியுள்ள மென்பொருள்.
  • உபயோகிப்பதற்கும் மிக சுலபமான மென்பொருள்.
  • AVG Anti Virus 2012  இயங்கும் பொழுது உங்கள் கணினியை வேகத்தை குறைக்காது.
  • உங்களுடையை கணினியில் உள்ள ரகசிய தகவல்களை மிகவும் கவனமாக பாதுக்காக்கும்.
Download Links
  • AVG Online Installer - Download
  • AVG for Windows(32bit) - 150 MB - Download-[offline Installer]
  • AVG for Windows(64bit) - 170 MB - Download -[offline Installer]
கணினிகளில் இணைய இணைப்பு இல்லாதவர்கள் Offline Installer லிங்கில் சென்று முழு மென்பொருளையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.