Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, February 4, 2012

வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள்


வீட்டின் வரவு, செலவு கணக்குகளை எளிதாக கையாள்வதற்கு ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
http://www.home-budget-software.com/ முதலில் இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இதனை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.
பின் இந்த மென்பொருளை open செய்ததும் இடது புறம் ஒரு window open ஆகும். அதில்Expense, Income, Refund என மூன்று ரேடியோ buttons இருக்கும். நீங்கள் எந்த வகையான தகவல்களை உள்ளீடு செய்யப்போகின்றீர்களோ அந்த விவரத்தை தட்டச்சு செய்யவும்.
இதில் உள்ள Category-யில் நமக்கு தேவையான கூடுதல் விவரங்களையும் இணைக்கலாம். இதில் Name என்பதில் பெயரையும், Group-என்பதில் அதன் வகையையும், Color-என்பதனை தெரிவு செய்வதன் மூலம் சுலபமாக அறிந்துகொள்ளவும் முடியும்.
அதன் பின் Save என்பதனை click செய்து நாம் விவரங்களை சேமித்துக் கொள்ளலாம். இதில் உள்ள Overview என்பதனை click செய்வதன் மூலம் நம்முடைய வரவு -செலவினை graph மூலம் அறிந்துகொள்ளலாம்.

Friday, February 3, 2012

ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு உதவும் இணையத்தளம்




ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு பர்ன் நோட் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது.
நீங்கள் யாருக்கு செய்தி அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே அந்த செய்தியை படிக்க கூடிய அளவுக்கு பாதுகாப்பாக செய்திகளை அனுப்புகிறது.
முகப்பு பக்கத்தில் உள்ள பகுதியில் செய்தியை டைப் செய்தவுடன் அதற்குறிய இணைப்பு முகவரி ஒன்றை தருகிறது. இந்த முகவரியை யாருக்கு அனுப்பி வைக்கிறோமோ அவர்கள் மட்டும் தான் அதனை படிக்க முடியும். அவர்களும் கூட குறிப்பிட்ட நேரம் வரை தான் படிக்க முடியும். அதன் பிறகு அந்த செய்தி இணைய வெளியில் மறைந்து விடும்.
செய்தியை எத்தனை நொடிகள் பார்க்கலாம் என்ப‌தையும் அதற்கு கடவுச்சொல் தேவையா என்பதை கூட அனுப்புகின்றவரோ தெரிவு செய்து கொள்ளலாம். கடவுச்சொல் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு மட்டும் தான். ஆனால் செய்தி அனுப்ப உறுப்பினராக வேண்டும் என்ற நிபந்தனையில்லை.
எந்த செய்தியும் ஒரே ஒரு முறை மட்டுமே படிக்க முடியும். உறுப்பினராக இருந்தால் செய்தி படிக்கப்பட்டு விட்டதா என்னும் பதிலை தெரிந்து கொள்ளும் வசதியும் உண்டு.
ரகசிய செய்திகளை யாரும் ந‌கலெடுக்கவோ அல்லது அந்த இணைய பக்கத்தையோ மொத்தமாக ஸ்கிரின்ஷாட் போல சேமிப்பதோ சாத்தியமில்லை என்றும் இந்த தளம் உறுதி அளிக்கிறது.
இந்த செய்திக்கான பக்கத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்தாலும் அந்த பக்கம் காலியாக தான் இருக்கும். யாருக்கு அனுப்பபட்டதோ அவரால் செய்தி பார்க்கபடவில்லை என்றாலும் 72 மணி நேரத்தில் செய்தி தானாக மறைந்து விடும்.

Wednesday, February 1, 2012

காணாமல் போன Task Manager-ஐ மீட்க........




உங்களது கணணியில் ஏதேனும் ஒரு மென்பொருளை நிறுவும் போது வைரஸ் தாக்கினால் டாக்ஸ்மேனேஜர்(Task Manager) காணாமல் போகிவிடும்.
இந்த Task Manager இல்லையென்றால் எந்த ப்ரோக்ராமையும் ரன் பண்ணவே முடியாது. அதனைப்போலவே எந்த ப்ரோக்ரமையும் நிறுத்த முடியாது.
முதலில் டாக்ஸ்பாரில் கர்சரை வைத்து கிளிக் செய்யவும். அதன்பின் தோன்றும் விண்டோவில் டாக்ஸ்மேனேஜர் தெரிகின்றதா அல்லது மறைந்துள்ளதா என பாருங்கள்.
அது மறைந்திருந்தால் அதனை கொண்டுவரும் வழியை இப்போழுது காணலாம். முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்துகொள்ளவும். அதில் ரன் ஓப்பன் செய்துகொள்ளவும்.
அதில் gpedit.msc என type செய்து பின்னர் ok என கிளிக் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் user configuration ஐ டபுள் கிளிக் பண்ணவும்.
அதன் பின் தோன்றும் விண்டோவில் Administrative Template என்பதை டபுள் கிளிக் பண்ணவும், பின் ஓபனாகும் விண்டோவில் system என்பதனை டபுள் கிளிக் பண்ணவும்.
அதன் பின் Ctl+Alt+Del option என்று உள்ளதை, டபுள் கிளிக் செய்யவும். பின் தோன்றும் விண்டோவில் ஏதாவது ஒன்றில் டபுள் கிளிக் செய்யவும்.
அதன் பின் Disabled என கிளிக் பண்ணி Apply கொடுக்கவும், பிறகு ok கொடுக்கவும், இப்போது பழையபடி நாம் டாக்ஸ்பாரில் வந்து ரைட் கிளிக் செய்து பார்த்தால் Task Manager வந்துவிடும்.

புதிய கட்டமைப்பு IPv6 ஜூன் மாதம் அறிமுகம்


இணையத்தின் வழியே நாம் ஒரு கணணியில் இருந்து மற்றொரு கணணிக்கு தகவல்களை பரிமாற முடியும்.
நமது தகவல்கள் முதலில் சிறு சிறு பாக்கெட்டுகளாக(Packet) பிரிக்கப்படும். இந்த பாக்கெட்டுகள் மற்றொரு கணணியை அடைய வேண்டுமானால் அதற்கு நெட்வொர்க்(Network) அமைப்பும், அடுத்தடுத்த நெட்வொர்க் தளத்தினை அடைய ஒரு இன்டர்நெட் புரோடோகால்(Internet Protocol) முகவரியும் தேவைப்படுகிறது.
இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது.
இதனை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும். இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எவ்வளவு வகைகளில் அமைக்க முடியுமோ, ஏறத்தாழ அந்த எண்ணிக்கையில் முகவரிகள் அமைக்கப்பட்டுவிடக் கூடிய சூழ்நிலை இன்னும் சில மாதங்களில் உருவாகிவிடும். எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் இன்டர்நெட் சேவை அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால், இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் மாதம் 16ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் எண்ணப்படும்.

IPv4 அமைப்பு முகவரியில்(32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதில் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. அதே ஆண்டு அக்டோபரில் மிச்சமிருக்கும் நிலை 5% ஆக உருவானது.
நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.
இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் நெட்வொர்க் நிறுவனங்கள் கையாளும்.