Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, June 9, 2012

கைபேசிகளுக்கான முழுமையான உலாவி: Skyfire

பொதுவாக கைபேசி உலாவிகளில் இணையத்தளங்கள் முழுமையாக தெரியாது, குறிப்பாக இணைய பக்கங்களில் வீடியோக்களை காண முடியாது.
இது போன்று சில குறைபாடுகள் கைபேசி உலாவியில் உண்டு. ஸ்கைபயர்(Skyfire) கணணியில் இணையத்தளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் கைபேசி உலாவியில் இணையத்தளங்கள் தெளிவாக தெரிகின்றன.
யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணணியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.
ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இயங்குதளத்தை உபயோகிக்கும் கைபேசிகளுக்கென்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை கைபேசிகளையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.
மிக குறிப்பாக தமிழ் இணையத்தளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற கைபேசி உலாவிகளில் தமிழ் இணையத்தளங்களை பார்க்க முடியாது.
ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.
நீங்கள் கைபேசியில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.
உங்கள் கணணியில் தரவிறக்கிய பின் உங்கள் கைபேசிக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள்.
நேரடியாக உங்கள் கைபேசியில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து m.skyfire.com இந்த முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.

Sunday, June 3, 2012

புதிய புரட்சிகர Li-fi தொழில்நுட்பம் .....



இன்டர்நெட் தொழிநுட்பத்தில் மறக்க முடியா பெயர் Wi-fi. வயர் இல்லாமல் இன்டர்நெட் உபயோகிக்க பயன்படுத்தும் இந்த தொழில்நுட்பத்திற்கு விடை கொடுக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.

டாக்டர்கள் முஸ்தபா அப்கனி, கார்டன் போவே மற்றும் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் ஆகியோரின் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புரட்சிகர Li-fi தொழில்நுட்பம் எதிர்க்கால இன்டர்நெட் உலகை மாற்றியமைக்க போவதாக அறிவியல் உலகம் கருதுகின்றது.

wifi தொழில்நுட்பத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது ரேடியோ அலைவரிசை சிக்னல்களை உபயோகிப்பது தான். இந்த சிக்னல்கள் மற்ற அலைவரிசையுடன் குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுத்த கூடாது என்பதற்காக தான் விமானம், மருத்துவமனை போன்றவற்றில் wifi-யை தடை செய்கின்றனர்.

Visible light communication (VLC) என்று அழைக்கப்படும் Lifi தொழில்நுட்பத்தில், ஒளியை கொண்டு தகவல்கள் அனுப்படுவதால் மேலே கூறிய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. மேலும் தண்ணீருக்கு அடியிலும் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.



இன்னும் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த தொழில்நுட்பம் wifi-யை விட ரொம்ப விலை மலிவானது. மேலும் மிக வேகமானதும் கூட. 10 Gbps வரை இதன் வேகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 1.5 hrs ஓடக்கூடிய ஒரு High Definition வீடியோவை 30 நொடிகளில் டவுன்லோட் செய்திடலாம்.

இன்னும் ஐந்து வருடங்களில் இந்த தொழில்நுட்பம் நம் கணிப்பொறிகள் மற்றும் மொபைல் போன்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும் என்று சமீபத்திய EFY (Electronics for You) இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் இருப்பது போல இதிலும் குறைகள் உண்டு. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் வேகத்தில் தலைச்சிறந்து இருப்பதால் அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியிருக்கின்றனர்.

Saturday, March 24, 2012

தேவையில்லாத மின்னஞ்சல்களை தடை செய்ய.....

இணையத்தில் உலாவுகையில் மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதன் மூலம் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்க்கலாம்.
ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக மின்னஞ்சல் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன்படுத்துவதற்காக என்றே தற்காலிக மின்னஞ்சல் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
டட்மெயில், நாட் ஷேரிங் மை இன்போ என்று பல இணையத்தளங்கள் வேண்டாத மின்னஞ்சல்களில் இருந்தும், விளம்பர மின்னஞ்சல்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன.
இந்த வரிசையில் பவுன்சர் என்ற தளம் புதிதாக அறிமுகமாகி உள்ளது. மின்னஞ்சல்களை தடை செய்வதில் இது கொஞ்சம் புதுமையான வழியை பின்பற்றுகிற‌து.
பவுன்சர் புதிதாக ஒரு மாற்று மின்னஞ்சலை உருவாக்கித் தாராமல் உங்கள் மின்னஞ்சல் முகவரியையே மாற்றித் தருகிறது. அதாவது பிட்.லே போன்ற மின்னஞ்சல் சுருக்க சேவையை போல இதுவும் மின்னஞ்சல் முகவ‌ரியை சுருக்கி தருகிற‌து.
இதற்காக இந்த தளத்தில் மின்னஞ்சல் முகவ‌ரியை சமர்பித்தவுடன் அதனை அழகாக சுருக்கி தருகிறது. தேவைப்பட்டால் இந்த முகவரியை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.
அதன் பிறகு எந்த தளத்தில் மின்னஞ்சல் முகவரியை சம‌ர்பிக்க வேண்டியிருந்தாலும் இந்த சுருக்கமான முகவரியை அளித்தால் போதும்.
பதில் மின்னஞ்சல்கள் பவுன்சர் முகவரி வழியே உங்கள் இன்பாக்சை வந்தடைந்து விடும். ஆனால் உங்கள் உண்மையான மின்னஞ்சல் முகவரி யாருக்கும் தெரியாது. பாதுகாப்பாகவே இருக்கும்.
இந்த தளம் சுருக்கப்பட்ட மின்னஞ்சல் முகவ‌ரியை அதிலிருந்தே டிவிட்டர் அல்லது பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். பவுன்சர் முகவரியை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து விடலாம்.அதே போல எத்தனை முகவரிகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம்.

Tuesday, March 20, 2012

அனைத்து மென்பொருள்களையும் நிறுவ....

கணணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது, மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.
இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம், ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று.
இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. ஒட்டு மொத்தமாக எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு, ஒரே நேரத்தில் கணணியில் நிறுவி விடலாம்.
நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும்.
உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு, கீழே உள்ள Get Installer என்ற பட்டனை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தற்போது அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்கப்பட்டு, உங்களது கணணியில் நிறுவப்பட்டு விடும்.