Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, December 28, 2011

போட்டோக்களின் தரம் சிறிதும் குறையாமல் அளவை மட்டும் குறைக்க


நம்மிடமோ அல்லது கூகுளில் தேடியந்திரத்தில் இருந்தோ புகைப்படங்களை நாம் பற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். பிளாக்குகள்,பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற தளங்களில் புகைப்படங்களை பகிர்கிறோம். இதில் டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்படும் தரம் மிகுந்த போட்டோக்கள் 5mb முதல் 10mb வரை இருக்கும். இது போன்ற புகைப்படங்களை சமூக தளங்களில் அப்லோட் செய்தால் மிகவும் நேரம் எடுக்கும். மற்றும் உங்கள் பிளாக்குகளில் போட்டால் பதிவு திறப்பதற்கும் அதிக நேரம் எடுக்கும் இதனால் வாசகர்களை இழக்க நேரிடலாம். மற்றும் நீங்கள் limited band width hosting உபயோகித்தால் தேவையில்லாமல் உங்கள் பணம் தான் விரயமாகும். இந்த பிரச்சினைகளை தீர்க்க வந்துள்ளது JPEGmini என்ற புதிய ஆன்லைன் டூல்.

மேலே உள்ள படத்தை பாருங்கள் 2.5 mb அளவாக இருந்த புகைப்படத்தை வெறும் 500KB யாக மாற்றி உள்ளது அதும் படத்தின் தரம் துளியும் குறையாமல்.
போட்டோவின் அளவு  குறைக்கப்படும் அளவு 
8 MP and higher                                  70% - 80%
5 - 7 MP                                               60 - 75%
3 MP                                                    50 - 60%
2 MP                                                    30 - 50%
1024x768                                             25 - 35%
800x600                                               20 - 25%
640x480                                               10 - 20%

உபயோகிக்கும் முறை:
உங்களின் புகைப்படத்தை அளவை குறைக்க இந்த தளத்திற்கு JPEGmini செல்லுங்கள். அங்கு உள்ள Select Photo என்ற பட்டனை கிளிக் செய்து நீங்கள் அளவு குறைக்க வேண்டிய போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.  அவ்வளுதான் உங்களுடைய போட்டோ அப்லோட் ஆகி அளவு குறைக்கப்ப பட்டு விடும்.

அடுத்து அங்கு உள்ள Download Photo என்ற பட்டனை அழுத்தி உங்களின் போட்டோக்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Complete list of Free Proxy Servers to access Blocked Sites easily

கணினியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய .....


உலகில் கோடிக்கணக்கான கம்ப்யுட்டர் இருந்தாலும் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு குறியீடு எண் கொடுத்து பிரித்து வைத்துள்ளனர். இதுவே ஐ.பி எண்(Internet Protocol) என அழைக்கபடுகிறது. இந்த ஐ.பி. எண்ணை வைத்து ஒரு கணினியின் இருப்பிடத்தையும், தகவல் பரிமாற்றங்களையும் சரியாக கூற முடியும். இது மட்டுமில்லாமல் ஹாக்கர்கள் கணினியின் ஐபி எண்ணை அடிப்படையாக கொண்டே கணினியை முடக்குகின்றனர்.  (ஆகையால் உங்கள் கணினியின் ஐபி எண்ணை யாரிடமும் பகிந்து கொள்ள வேண்டாம்). கணினியின் ஐ.பி. எண்  சுலபமாக கண்டறிய சிறந்த 10 தளங்கள் கீழே கொடுத்துள்ளேன். இந்த ஐபி எண்களை நாம்ஆப்லைனிலும் பார்த்து கொள்ளலாம். 
இந்த தளங்களில் ஐபி எண் மட்டுமில்லாமல் உங்களின் இணைய வழங்குனர், மற்றும் நீங்கள் இருக்கும் இருப்பிடம் போன்ற சில விவரங்களும் வரும்.

1) What is my ip address
இந்த தளம் ஐபி எண்ணை கண்டறிய மிகவும் பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் ஐபி எண் மட்டுமின்றி சில கூடுதல் விவரங்களும் வருகிறது. அது மட்டுமில்லாமல் நம் கணினியின் இருப்பிடத்தை கூகுள் மேப் உதவியுடன் காட்டுகிறது.

இந்த தளத்தில் நம்முடைய கணினியின் ஐ.பி எண் மட்டும் காட்டுகிறது. மற்றும் ஐ.பி. எண்ணை பற்றிய ஒரு விரிவான கட்டுரையை ஆங்கிலத்தில் அங்கு கொடுத்துள்ளனர். தேவை படுபவர்கள் அதை படித்து ஐபி எண்ணை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த தளத்தில் உங்கள் ஐபி எண்ணோடு உங்கள் இணையதளத்தில் இணைக்க விட்ஜெட் கோடிங்கையும் கொடுத்துள்ளனர். 

மற்ற தளங்களில் நாம் சென்றாலே நம் கணினியின் ஐ.பி. எண்ணை கண்டறிந்து விடலாம். ஆனால் இந்த தளத்தில் சில குறியீடு எண்ணை கொடுத்து Show my IP என்ற பட்டனை அழுத்தினால் தான் நம்முடைய கணினியின் ஐ.பி. எண்ணை கண்டறிய முடியும்.

இந்த தளத்தில் நம் கணினியின் ஐ.பி. எண் மட்டுமின்றி நம்முடைய கணினியில் உபயோகிக்கும் உலவிகள் அதன் வெர்சன்கள் போன்ற விவரங்களும் வருகிறது. 

இந்த தளத்தில் நமது ஐபி எண்ணும் மற்றும் அதனோடு நாம் உபயோகிக்கும் கணினியின் இயங்கு தளம் (Operating System), நாம் உபயோகிக்கும் உலவி(Browser) போன்ற விவரங்களும் வருகின்றன. மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக நம் இணைய வேகத்தையும் அறிந்து கொள்ளலாம். 

இந்த தளத்திலும் நம் கணினியின் ஐபி எண்ணை கண்டறியலாம். 

இந்த தளத்தில் நமது ஐபி எண்ணும் மற்றும் அதனோடு நாம் உபயோகிக்கும் கணினியின் இயங்கு தளம் (Operating System), நாம் உபயோகிக்கும் உலவி(Browser) போன்ற விவரங்களும் வருகின்றன. மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக நம் இணைய வேகத்தையும் அறிந்து கொள்ளலாம். இன்னும் சில விவரங்களும் இதில் கிடைக்கிறது. 

இந்த தளத்தில் நம் ஐபி எண்ணோடு கூடுதல் வசதியாக நம் ஐபி எண்ணை மறைத்து இணையத்தில் உலவும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தளத்திலும் நம் ஐபி எண்ணும் அதன் இருப்பிடத்தை கூகுள் வரைபடம் கொண்டும் காட்டியுள்ளனர்.

JFL Hidden Camera Pranks & Gags: Real Boy Pinocchio - YouTube

JFL Hidden Camera Pranks & Gags: Real Boy Pinocchio - YouTube:

'via Blog this'